ரகசியம் உள்ளதாக சொன்னீர்களே.. அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?.. கொதிக்கும் எடப்பாடி.. பாய்ச்சல்!
சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தில் மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் ஏற்கனவே மருத்துவர் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். ஆனால் இரண்டு தேர்விலும் தேர்ச்சியாகாத நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

நீட்
நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வந்த கட்சிகளில் திமுக முதன்மையானது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறியது. இந்த நிலையில் வலுவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதால் இந்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் தமிழ்நாடு அரசு மூலம் முன்னாள் நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் சாதக பாதகங்களை இந்த குழு ஆராய்ந்தது.

திமுக
மக்களின் கருத்துக்களும் இதில் வரவேற்கப்பட்டது. இதில் நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தனர். அதிக பட்ச மக்களால் நீட் தேர்வுக்கு எதிராகவே குரல் கொடுத்து இருந்தனர். இதையடுத்து நாளை நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தீர்மானம் செய்யப்பட உள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் திட்டம் உள்ளது.
|
விமர்சனம்
இப்படிப்பட்ட நிலையில்தான் மாணவர் தனுஷ் நீட் தேர்வுக்கு அச்சப்பட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அதில், நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
|
மரணக்குழி
அதற்கு சரியான பதிலைக் கூறி அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ரகசியம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் ரகசியம் தங்களிடம் இருப்பதாக திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டு இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுக்கொடுப்போம் என்று திமுக குறிப்பிட்டு இருந்தது. தற்போது இதைத்தான் விமர்சனம் செய்து எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். ஆட்சிக்கு வந்த 4 மாதம் ஆகியும் இன்னும் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications