நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல்!.. அதிமுக வெளிநடப்பு
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகி போகிறது.
இதனால் இந்த தேர்விலிருந்து விலக்கு கோரி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்..

திமுக- அதிமுக
அப்போது நீட் தேர்வு குறித்து அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்வதாக ஸ்டாலின் அறிவித்ததும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நீட் தேர்வு சமத்துவமின்மை வளர்க்கிறது. சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது.

நடுநிலையான தேர்வு
நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ஏகே. ராஜன் குழு அறிக்கை மூலம் தெளிவாகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் நம்பிக்கை, கனவை தகர்த்துள்ளது. கட்டாயமாக எதிர்கொல்ளும் கூடுதல் தேர்வானது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்புப் பயிற்சி பெறக் கூடியவர்கள், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், அதிக சமுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கவே நீட் தேர்வு. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் போன்ற சமூகத்தினருக்கு நீட் தேர்வு எதிரானது என நீதிபதி ராஜன் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தரத்தை உறுதி செய்வது
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தகுதி, தரத்தை நீட் தேர்வு உறுதி செய்வதாக தெரியவில்லை. குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர மட்டுமே நீட் தேர்வு உதவியுள்ளது என கூறிய ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தருமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீட் தேர்வு மசோதா
இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அது போல் பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி, மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்து வரவேற்று பேசினர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் நீட் விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவு தந்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், இனி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடக்கும் என்றார். இதையடுத்து அந்த மசோதாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications