நீட் தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த உத்தரப் பிரதேசம்.. தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.70 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 557 நகரங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதி இருந்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு எழுதிய 22 லட்சம் பேரில் 12.36 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 7.22 லட்சம் மாணவிகளும், 5.14 லட்சம் மாணவர்களும் அடங்குவர். அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்களில் 6 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டை போல நடப்பாண்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் வட இந்தியாவை விடவும் தென்னிந்திய மாநிலங்களில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் தென்னிந்திய மாநிலங்களை விடவும் வட இந்திய மாநிலங்களே முன்னணியில் இருக்கிறது. அதன்படி உத்தரப் பிரதேச மாநில அதிக தேர்ச்சியுடன் முதலிடத்தில் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரத்து 684 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரத்து 727 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்பின் 3வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. இங்கிருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 865 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்பின் கர்நாடகா மாநிலத்தில் இருந்து 83 ஆயிரத்து 582 மாணவர்கள் தேர்ச்சியுடன் 4வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து பீகார் மாநிலத்தில் 80 ஆயிரத்து 954 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பின்னர் தமிழ்நாடு 76 ஆயிரத்து 181 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. இதன்பின் கேரளா 73 ஆயிரத்து 328 மாணவர்களின் தேர்ச்சியுடன் 7வது இடத்தில் இருக்கிறது. நடப்பாண்டில் இந்த 7 மாநிலங்களும் முன்னணியில் உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications