நீட் பூஜ்ஜியம்.. முதுகலை மருத்துவம் படிக்க மார்க் வேண்டாமா? பெர்சன்டேஜ் பெர்சன்டைல் வித்தியாசம் என்ன?
சென்னை: நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஸீரோ பெர்சண்டைல் என்பது ஸீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஸீரோ பெர்சண்டைல் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-வினர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது," என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
Percentage vs Percentile இரண்டுமே பார்க்க ஒன்று போல் இருந்தாலும் percentageக்கும் percentileக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்று கூறியுள்ளார் மருத்துவர் சென் பாலன்.
பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.
Percentage vs Percentile
— Aravindakshan B R (@RealAravind36) September 21, 2023
இரண்டுமே பார்க்க ஒன்று போல் இருந்தாலும் percentageக்கும் percentileக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த… pic.twitter.com/tffQERseyW
பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89, 90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் = 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர். 50th percentile is 92.
இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள் = 18,22, 34, 35, 36, 40,41,41,42 50th percentile is = 36
அதாவது 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஸீரோ பெர்சண்டைல் என்பது ஸீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஸீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி.
அந்த வகையில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி, மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்பதே பொருள். என்று மருத்துவரும் எழுத்தாளருமான Dr.சென் பாலன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications