தூங்கி எழுந்ததும் எங்க அப்பா முகத்தை பார்க்கணும்னா?.. நோ சொன்ன பெண்.. "கலங்கிய" நீயா நானா கோபிநாத்
சென்னை: நீயா நானாவில் வீட்டு உரிமையாளர்கள் வெர்சஸ் வாடகைக்கு குடியிருப்போர் என்ற தலைப்பிலான விவாதத்தில் நிகழ்ச்சியின் நெறியாளர் கோபிநாத் அழும் நிலைக்கு சென்ற வீடியோ டிரென்டாகி வருகிறது.
விஜய் டிவி ஆடல், பாடல், லைவ் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள், விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடியான சில நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதால் பெரும்பாலான மக்கள் விஜய் டிவியின் ரசிகர்களாகிவிட்டனர்.
மேலும் மக்கள் மனதை அள்ளும் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களும் உள்ளன. இந்த நிலையில் நீயா நானா எனும் விவாத நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கோபிநாத்
இந்த நிகழ்ச்சியின் நடுவராக கோபிநாத் உள்ளார். இவர் அணிந்து வரும் கோட் பிரபலமானது. யாராவது கோட் அணிந்திருந்தால் நீயா நானா கோபிநாத் மாதிரி கோட் போட்டிருக்கீங்களே என கிண்டல் செய்வதும் வழக்கம். அவர் கண் முன்னே விஜய் டிவி காமெடியன்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். அது போல் அவர் மிஸ்டர் அண்ட் மிஸ்டிரஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார்.

நீயா நானா
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் நாம் அன்றாடம் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகளை மையமாக வைத்தே தலைப்புகள் உள்ளதால் மக்கள் இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலாவது பார்த்துவிடுகிறார்கள். அண்மையில் வீட்டு வேலை செய்பவர்கள், பணியாளரை வேலைக்கு அமர்த்தும் பெண்கள் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வீட்டு பணியாளர்கள்
இந்த நிகழ்வில் பணியாளர்களை வேலைக்கு வைக்கும் குடும்பத் தலைவிகளில் சிலரை கோபிநாத் கிழிகிழியென கிழித்தார். அந்த வகையில் இந்த வாரம் நீயா நானாவில் வீட்டு உரிமையாளர்கள் வெர்சஸ் வாடகைக்கு குடியிருப்போர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. இதில் வீட்டு உரிமையாளர்கள்- அதிகபட்சம் 4 பேர் மட்டும், தண்ணீர் அளவாக உபயோகிக்க வேண்டு, கை குழந்தை இருப்பவர்கள் வேண்டாம் என்ற கண்டிஷன்களை போட்டுள்ளார்கள்.

தண்ணீர் நிறைய செலவாகும்
இது ஏன் என கேட்டதற்கு குழந்தை இருந்தால் தண்ணீர் நிறைய செலவாகும் என உரிமையாளர் சொல்கிறார். அது போல் இன்னொரு உரிமையாளரின் கண்டிஷன்- மாதந்தோறும் 7ஆம் தேதிக்கு முன்னர் வாடகை செலுத்திவிட வேண்டும். சைவ உணவு சாப்பிடுவோர் மட்டுமே, உங்கள் சொந்த வீட்டை போல் இந்த வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆணி அடிக்கக் கூடாது என மற்றொரு உரிமையாளர் சொல்கிறார். அப்போது வாடகைக்கு குடியிருப்போரில் ஒருவர் எங்களுக்கு சவுகரியமான ஒரு இடத்தில் ஆணி அடித்தால் என்ன என கேட்கிறார். அதற்கு உரிமையாளர்கள் குழுவில் இருக்கும் பெண், எத்தனை பேர் நீங்கள் போட்ட ஆணியை மூடிவிட்டு வெள்ளை அடித்துவிட்டு செல்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறார்.

அப்பா போட்டோ
அப்போது கோபிநாத் , தூங்கி எந்திரிச்சவுடன் எங்க அப்பா போட்டோவை பார்க்க வேண்டும் என எனக்கு ஆசை இருக்கும் என்கிறார். அதற்கு அந்த பெண் ஆணி அடிக்கக் கூடாது என்கிறார். உடனே கோபிநாத் அழும் குரலில் அப்போ எங்கப்பா போட்டோவை நான் பார்க்கக் கூடாதா என கேட்கிறார். இப்படியாக இந்த ப்ரோமோ உள்ளது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications