ஊத்திக்கிச்சு குபேரா.. ‘மூக்குத்தி’ நாயகி ஹேப்பி! ஏக குஷியில் ‘எதிர்நீச்சல்’ நாயகன்! உடைத்த பிரபலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'குபேரா' திரைப்படம் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் மூக்குத்தி நாயகியும், எதிர்நீச்சல், வெந்து தணிந்தது காடு நாயகர்களும் குஷியாக இருக்கின்றனர் என கூறியிருக்கிறார் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

நடிகர் தனுஷ் நடிப்பில், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், 'குபேரா' திரைப்படம் நேற்று ( 20ஆம் தேதி) வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த படம் 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ் நேரடியாக நடித்த தெலுங்கு படம் இது. பல விருதுகளை அள்ளிக் குவித்த பிரபல இயக்குனரான சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக தனுஷ் இணைகிறார் என்ற அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Dhanush Kubera Blue Sattai maran

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான சார், நானே வருவேன், கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அவர் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் மண்ணைக் கவ்வியது. இதனால் தனுசுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில் குபேரா படத்துக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். திட்டமிட்டபடி படம் நேற்று வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் அது கேள்விக்குறி தான்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களை பணக்காரர்கள் போல மாற்றி பணத்தை கை மாற்றுவது தான் கதை. இடையில் ராஷ்மிகா மந்தனாவை தனுஷ் சந்திக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதை. ஏற்கனவே பல படங்கள் இதேபோல தமிழில் வந்திருக்கிறது. மோசமான திரைக்கதை, மிகவும் மெதுவாக நகரும் இரண்டாம் பாதி என படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்து இருக்கிறது. தனுஷ் மட்டுமே ஒற்றை ஆளாக படத்தை தாங்கிப் பிடிக்கிறார்.

நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப் உள்ளிட்டோர் நடித்திருந்தாலும் ஓவர் ஆக்டிங் என விமர்சனம் எழுந்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மட்டுமே ஓரளவுக்கு கை கொடுத்தாலும், பாடல்கள் கை கொடுக்கவில்லை. 3 மணி நேர நீளமான படம் ரசிகர்களை வாட்டி வதைப்பதாக ட்விட்டரில் விமர்சனம் எழுந்துள்ளது. இப்படியாக படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்திருக்கும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் குபேர படத்தின் ரிசல்ட்டால் சில நடிகர் நடிகைகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என கூறி இருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்," குபேரா படத்தின் ரிப்போர்ட்டை கேட்டு...‌Nose piercing நாயகியும், Opposite Swimming மற்றும் Burned out forest நாயகர்களும் குஷியாக உள்ளனராம். - காயாங்குளம் கொச்சுண்ணி பழைய பத்திரிக்கையாளர்" என பதிவிட்டுள்ளார்.

அதாவது நடிகை நயன்தாரா, எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சிம்பு ஆகியோர் தான் குபேரா படத்தின் தோல்வியால் உற்சாகத்தில் இருப்பதாக விமர்சித்திருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக தனுஷ் நயன்தாரா இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+