நெல்லை உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி-உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் இடமாற்றம்-தமிழக அரசு அதிரடி
சென்னை: விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், நெல்லை எஸ்.பி சரவணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜனும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. விசாரணைக் கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பல்வீர்சிங்கை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. பல்வீர் சிங் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். உதவி கலெக்டர் முகம்மது சபீர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர். பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை எஸ்.பி சரவணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜனும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications