"ஆபரேஷன் பெயிலியர்.." அப்பா நெல்லை கண்ணன் விடுதலை.. ரெண்டே வார்த்தையில் எச்.ராஜாவுக்கு சீமான் பதிலடி
எச்.ராஜாவுக்கு சீமான் பதிலடி தந்துள்ளார்
சென்னை: "ஆபரேஷன் சக்சஸ்" என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு, சீமான் பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்.. "அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை... ஆபரேசன் பெயிலியர்!" என்று எச்.ராஜாவை சூசகமாக கிண்டல் அடித்துள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன்.. இவர் டிசம்பர் 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.. பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வரை கடுமையாகவும் பகிரங்கமாகவும், ஒருமையிலும் பேசினார்.

வைரல்
மேலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை தெரிவித்ததாக சொல்லப்பட்டது. நெல்லை கண்ணனின் இந்த ஒட்டுமொத்த பேச்சும் இணையத்தில் வைரலானது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியாக, இவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீனை கோர்ட் வழங்கியது. காலையும் மாலையும் மேலப்பாளையம் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மெரினா தர்ணா
நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவதற்கு முன்னமேயே, தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தவர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.. நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி, மெரினா வரை போய் தர்ணாவில் உட்கார்ந்து கைதும் ஆனார்.
|
கண்டனங்கள்
இதையடுத்துதான் நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். நெல்லை கண்ணன் கைது என்ற செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே "ஆபரேஷன் சக்சஸ்" என்று ட்வீட்டினார் ராஜா... இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்... அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.

பாஜக
நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவிக்கும்போது, "மேடை பேச்சுகளுக்குக் கைது என்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள்.. அப்பா நெல்லை கண்ணன் கைது தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்" என்று கொதிப்புடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
|
சீமான் ட்வீட்
இப்போது நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து "ஆபரேஷன் சக்சஸ்" என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு, சீமான் பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்.. "அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை... ஆபரேசன் பெயிலியர்!" என்று எச்.ராஜாவை சூசகமாக கிண்டல் அடித்துள்ளார். சீமான் போட்ட இந்த 2 வரி ட்வீட்டுக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் வந்து குவிந்து வருகின்றன.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications