ஆட்சி மாறட்டும்.. அந்த "வீடியோக்கள்" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்
குஷ்புவுக்கு நெல்லை கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "எஸ்.வி. சேகர் வீடியோ பதிவுகள், ஹெச்.ராஜா வீடியோ பதிவுகள் மகளின் பெயரில் ஒளிந்து கொள்ளும் ஒய்.ஜி மகேந்திரன் வீடியோக்கள் பத்திரமாக உள்ளன.. ஆட்சி மாறும் போது இந்த வீடியோக் காட்சிகளுக்கான விளைவுகள் நீதிமன்றங்களின் வழியாக தீர்ப்பாக வரும்" என்று நெல்லை கண்ணன் குஷ்பு பதிவிட்டுள்ளார்.
திருமாவுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று ஆர்ப்பாட்டமும் நடத்த முயன்ற குஷ்பு கைதான விவகாரம் 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான நெல்லை கண்ணன், இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "மரியாதைக்கும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய திருமதி குஷ்பு சுந்தர் சி முன்பொரு முறை பெண்கள் திருமணத்திற்கு முன்னர் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றபோது பாஜக தமிழ்நாட்டிலேயே இல்லை, மற்றவர்கள் சிலர் பல காவல் நிலையங்களில் வழக்குகளைப் பதிந்தார்கள்.
மனுநெறியை விடுங்கள், பிரபல சித்த புருஷர் எஸ்.வி.சேகர் ஊடகங்களில் இருக்கின்ற பெண்கள் கற்பு நிலையையெல்லாம் தொலைத்து தான் பெரிய பதவிகளுக்கு வந்துள்ளார்கள் என்ற போது எடப்பாடியார் அவர் வீட்டுப் பால் பாக்கெட் கெட்டுப் போனதற்கு நல்ல பால் பாக்கெட்டுகளை அதிகாரிகள் மூலமாகக் கொடுத்தனுப்பினார்.
வைரமுத்து என்கின்ற கருவாச்சிக் காவியம் தந்த கவிமகனின் தாயை எத்தனை அசிங்கமாக ஆபாசமாக ஹெச்.ராஜா பேசினார் ஒரு வீரக் குலத்துத் தாயை பேசினார் ஒரு தாயைப் பேசியதை பாஜக கண்டித்ததா? விடை தர இயலாதவர்கள் இவற்றுக்காக நடவடிக்கை எடுத்திருப்பின் எடப்பாடி பக்கம் நிற்கலாம்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் சாதிகளை பற்றி நிறைய பண்பாடற்ற பதிவுகளை வீடியோக்களாக யூ டியுப்பில் பதிவேற்றுகின்றாரே.. நேற்று தாய் குஷ்பு அவர்களைக் கைது செய்து ஒரு ரிசார்ட்டிலே பத்திரமாக தங்க வைத்துள்ளது எடப்பாடி அரசு பாராட்டுவோம்
எஸ்.வி. சேகர் வீடியோ பதிவுகள் ஹெச்.ராஜா வீடியோ பதிவுகள் மகளின் பெயரில் ஒளிந்து கொள்ளும் ஒய்.ஜி மகேந்திரன் வீடியோக்கள் பத்திரமாக உள்ளன ஆட்சி மாறும் போது இந்த வீடியோக் காட்சிகளுக்கான விளைவுகள் நீதிமன்றங்களின் வழியாக தீர்ப்பாக வரும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications