ஓசூர் அருகே காதலி கொலை! காதலன் தற்கொலை! இதுவரை நடந்த கொடூர சம்பவங்களின் பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நேற்றிரவு காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு லாரியில் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டம்,
சின்ன வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் ஓசூர் அடுத்த ஜி மங்கலம் பகுதி உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த திவ்யா ஜெயஸ்ரீ (20) என்பவரை பிரதீப் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

hosur crime

திவ்யா ஜெயஸ்ரீயை, பிரதீப் ஜீ, மங்கலம் பகுதியில் உள்ள தனது அறைக்கு அழைத்து வந்தாராம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பிரதீப், திவ்யா ஸ்ரீயை அரிவாளால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து வேகமாக அறையை விட்டுச் சென்ற பிரதீப், ஓசூர் பாகலூர் சாலையில் எதிரே வந்த லாரியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த பாகலூர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை சம்பவம்

இது போல் சென்னை பெரியமேடு விடுதியில் காதலியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கையை சேர்ந்த பவ்யா, ராமபுரத்தை சேர்ந்த பாரதி பெருமாள், இருவரும் காதலித்து வந்த நிலையில் பெரியமேட்டில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினராம். அப்போது இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த பாரதி பெருமாள், பவ்யாவை கொன்றுவிட்டு, அதே அறையில் தானும் தூக்கிட்டுக் கொண்டார்.

திருச்சி சம்பவம்

திருச்சியில் லால்குடி அருகே காதலித்து வந்த இளம் பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்ததை அறிந்த காதலன் அந்த பெண்ணை தனியாக வரழைத்து அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டார். பின்னர் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் காதலர்களுக்கு இடையே எழுந்த சந்தேகத்தின் காரணமாக காதலன், தனது காதலியை கத்தியால் குத்தினார். இதில் அவர் இறந்துவிட்டதாக கருதி காதலன் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், தமிழக அரசின் இலவசச் சேவை எண் 104 அல்லது சினேகா அமைப்பின் 044-24640050 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு உடனடியாக ஆலோசனையும் உதவியும் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+