குமரி ரவுடி இறப்பில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. கணவரை கொன்ற தவெக பெண் நிர்வாகி கைது!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே, தனது கணவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அவரது மனைவி பாரதி (37) கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி இணைச் செயலாளராக உள்ளார்.

Nagercoil Rowdy Murder Case TVK Office-Bearer Wife Accused of Killing Husband

கடந்த 23 ஆம் தேதி இரவு தனது வீட்டில் திடீரென சுரேஷ் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மனைவி பாரதியிடம் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, உடல்நிலை சரியில்லாமல் தனது கணவர் இறந்ததாக அவர் கூறியுள்ளார்.

சுரேஷ் 2 மாதங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும் அவரது மனைவி பாரதி கூறினர். சுரேஷ் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனையில் சுரேஷ் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்த நிலையில், "குடிபோதையில் இரவு நேரத்தில் செல்போனில் பாலியல் வீடியோக்களை காட்டி துன்புறுத்தியதோடு, உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்தும் கொடுமைப்படுத்தினார்.

இதனால் எனது 14 வயது மகனும் மனதளவில் பாதிக்கப்பட்டான். எனவே, நானும், மகனும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்" என பாரதி கூறியுள்ளார். இதையடுத்து, ரவுடி இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், பாரதி மற்றும் அவரது மகனை நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+