மருத்துவமனைகள் இனி இஷ்டத்துக்கு பில் போட முடியாது.. மருந்து விலைக்கும் கடிவாளம் போடும் அரசு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனியார் மருத்துவமனைகளில் ஒரே சிகிச்சைக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை கட்டணங்களை முறைப்படுத்தவும், மருந்துகளின் விலையை வெளிப்படையாக அறிவிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. நோயாளிகளின் மருத்துவ செலவுகளை குறைப்பதுடன், அதிகப்படியான கட்டண வசூலை கட்டுப்படுத்தவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடுகள் உடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் மருத்துவ கட்டணங்கள் குறைவு தான் என்றாலும் இதுவே நமது நாட்டில் பெரும்பாலானோருக்கு மிக அதிக கட்டணமாக இருக்கிறது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் ஒரே சிகிச்சைக்கு ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுவது மக்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.

Private Hospital Treatment Charges Karnataka

கர்நாடக அரசு

இந்த நிலைமையை மாற்ற கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிகிச்சை கட்டணங்களை முறைப்படுத்தவும், மருந்துகளின் விலையை வெளிப்படையாக அறிவிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர், சமீபத்தில் தான் தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த கூட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்தி, ஒரே மாதிரியான கட்டண பட்டியலை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் காதர் வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் சிகிச்சை கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலை நோயாளிகள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் சிகிச்சை பெறுவதற்கு முன்பே அதற்கான செலவுகளை நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தெரிந்துகொள்ள முடியும்.

விளக்கம்

ஆனால், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான கட்டணங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக மருத்துவமனை பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், சேவைகளின் தரம் ஆகியவை மாறுபடுவதால், ஒரே கட்டணத்தை நிர்ணயிப்பது சிரமமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மருத்துவமனைகள் கொள்முதல் செய்யும் மருந்துகளின் விலை மற்றும் நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படும் விலை ஆகியவற்றிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மருந்து உற்பத்தியாளர்களுடன் அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவமனை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இடைத்தரகர்கள் கணிசமான கமிஷன் பெறுவதாகவும், இதனால் மருத்துவமனைகள் பல நேரங்களில் அதிக விலைக்கு மருந்துகளை விற்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மருந்து விலை

மேலும், அனுமதியின்றி மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை உயர்த்தப்படுவது, புற்றுநோய், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து மருந்து நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகளை அமல்படுத்த ஆறு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆறு மாத கால அவகாசம் வழங்க முடியாது என்று அமைச்சர் காதர் திட்டவட்டமாக தெரிவித்தார். புதிய சாப்ட்வேர் நடைமுறைக்கு வரும் காலத்தை பொறுத்து காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடல்கள்

மருத்துவக் கட்டணங்கள் செலுத்தப்படாத காரணத்தால், உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை மருத்துவமனைகள் ஒப்படைக்க மறுப்பதை தடுப்பதற்கான தெளிவான கொள்கையையும் உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்களை தீர்க்கவும், காப்பீட்டு தொகையை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் காப்பீட்டு நிறுவனங்களுடன் தனியாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+