Cyclone Akvan: கருப்பன் வாராண்டா.. வங்க கடலில் வலம் வரும் அக்வான்! சென்னைக்கு இன்றைக்கு தான் சம்பவமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' புயல் தீவிரமடைந்து வருகிறது. இது அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, வரும் நவம்பர் 20ஆம் தேதி ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி," தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

Cyclone Bay of Bengal Rain Alert IMD

நவம்பர் 17ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், அதே பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. தற்போது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்வான் புயல், நவம்பர் 18ஆம் தேதி (இன்று) காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பர் 19ஆம் தேதி மாலை அதிதீவிரப் புயலாக மாறக்கூடும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் அளவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளைக் கடக்க வாய்ப்புள்ளது. பின்னர் நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியில் புயல் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 145 கி.மீ. வரை வீசலாம்.

இதனால் இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+