பக்ரீத் அன்றும் பணிக்கு வரணுமா? முதல்வர் ஆக்ஷன் எடுக்கணும்.. கோரிக்கை வைத்த நெல்லை முபாரக்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை நாளன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வரவேண்டும் என்று நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (ஜூன் 29) கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பி வர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை அன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தரவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு பெருநாள் விடுமுறையன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தர நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே! உடன் மேற்கண்ட உத்தரவை ரத்து செய்!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாளை (ஜூன் 28) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் அளிக்க உள்ளார். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இதனை காரணமாக வைத்து, பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் மாணவர்கள் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த அறிவிப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை நாளன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருமாறு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளதைக் குறிப்பிட்டு, இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் நெல்லை முபாரக்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications