EXCLUSIVE: நாங்க காரணமா? நிரந்தர அங்கீகாரம் யார் தந்தது? நெல்லை பள்ளியே பொறுப்பு: நந்தகுமார் சுளீர்
நெல்லை பள்ளி விபத்துக்கு தனியார் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: நெல்லை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. விபத்து நடந்த பள்ளிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளது.. இன்னும் சொல்ல போனால் நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
நெல்லை மாநகரில் அரசு உதவி பெறும் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 மாணவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

அதிர்ச்சி
இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தனியார் பள்ளி கூட்டமைப்பும் தன்னுடைய கண்டனத்தை வலுவாக பதிவு செய்துள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி இதுதான்:

தமிழக அரசு
"விபத்து நடந்தது, 100 சதவீதம் அரசு உதவி பெறும் பள்ளியில்.. வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து அந்த பள்ளி நூற்றாண்டு காலமாக இயங்கி வருகிறது.. அந்த பள்ளி கட்டிடம், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் சம்பளம் என அனைத்துமே தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.. மாணவர்களுக்கு இலவச சத்துணவு அனைத்தும் அரசு வழங்கி வருகிறது..

உயிரிழப்பு
அந்த பள்ளியில் இன்று காலை நடந்த கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.. இன்னும் 4 மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. அனைத்து ஊடகங்களும் தனியார் பள்ளி என்று குறிப்பிட்டு சொல்லி வருகிறார்கள்.. இது எங்களுக்கு வேதனையை தந்து வருகிறது.. நாங்கள் தமிழக அரசிடம் இருந்து 5 பைசாகூட நிதி உதவி பெறாமல் நடைபெற்று கொண்டிருக்கிற நர்சரி, பிரைமரி பள்ளிகளை சார்ந்த நிர்வாகிகள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள்.. அதனால் இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அங்கீகாரம்
விபத்து நடந்த பள்ளிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளது.. இன்னும் சொல்ல போனால் நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளது.. எனவே, அந்த அரசு நிதி உதவி பெறக்கூடிய பள்ளிகளை தனியார் பள்ளிகள் என்று சொல்வதை நிறுத்த வேண்டும்.. அது தனியார் பள்ளி அல்ல அரசு நிதி உதவி பெறும் பள்ளி என்று பலமுறை இன்றைய என்னுடைய தொலைக்காட்சிப் பேட்டிகளில் தெரிவித்து விட்டேன்.

கண்டனம்
இருந்தாலும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் தனியார் பள்ளி என்று பொதுமக்கள் மத்தியில் பொய்யான செய்தியை பரப்பி வருவது வன்மையாக கண்டிக்கிறோம்...இனியும் தொடர்ந்து தனியார் பள்ளிகள் என்று கற்பனை கலந்த வர்ணனைகளை வெளியிட்டால் எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் சம்மந்தப்பட்ட ஊடகங்கள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

கும்பகோணம்
கும்பகோணத்தில் சத்துணவு கூடத்தில் 98 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்ததும், அரசு உதவி பெறும் பள்ளிதான்.. அதுபோலவே இதுவும் அரசு உதவி பெறும் பள்ளிதான்.. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.. இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை அரசு அளிக்க வேண்டும்.. சிகிச்சையில் உள்ள மாணவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அந்த 4 மாணவர்களையும் உயிரோடு காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மழை
இதுபோன்ற சம்பவங்கள் இது போன்று எங்குமே நடக்க கூடாது.. அண்மையில்கூட கடலூரில் அரசாங்க துவக்க பள்ளி, கட்டிடம் கட்டி 4 ஆண்டுகளில் பெய்த மழையில் இடிந்து விழுந்துவிட்டது.. மழைக்காலங்களில்தான் பள்ளிகளை பராமரிக்க வேண்டி உள்ளது.. பொதுவாக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி கட்டிடத்தின் தன்மையை ஆராய்ந்து மாவட்ட பொறியாளர் சான்றிதழ் வழங்குகிறார். அது மட்டுமின்றி அதன் பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதை உறுதி செய்து சான்று வழங்குகிறார் . அதேபோல் இந்த பள்ளிக்கும் சான்று வழங்கபட்டு இருக்கிறது.
Recommended Video

சான்றிதழ்
எனவே பள்ளி நிர்வாகமும் சான்றளித்த அரசு அதிகாரிகளும் இந்த விபத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இனி எந்த காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது. நூற்றாண்டு கண்ட இந்த பள்ளிக்கு கூட மாவட்ட முதன்மை கல்வி தான் இதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்... இதற்கு பொறுப்பும் அவர்கள்தான் ஏற்க வேண்டும்.. " என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications