நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்கள்.. விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்கு குட்நியூஸ்
சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-12689) இன்று (சனிக்கிழமை) முதலும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயிலில் (12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-12689) இன்று (சனிக்கிழமை) முதலும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரயிலில் (12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும்.

அதே போல, சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20681) இன்று முதல் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி வரையும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் ரயிலில் (20682) இன்று முதல் அடுத்த மாதம் 19-ந்தேதி வரையும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22657) நாளை முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் ரயிலில் (22658) வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரையும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி - தென்காசி மார்க்கத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், " மே 25 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் இருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, வரும் 25.05.2025 (ஞாயிறு) முதல் நெல்லையில் இருந்து மாலை 6:20 மணிக்கு தென்காசி மார்க்கமாக புறப்படும் (வண்டி எண்: 56737) பயணிகள் ரயிலிலும், அதே நாளில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு நெல்லை மார்க்கமாக புறப்படும் (வண்டி எண்: 56738) பயணிகள் ரயிலிலும் கூடுதலாக தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இதே போல், வரும் 28.05.2025 (புதன்) முதல், செங்கோட்டையில் இருந்து காலை 6:40 மணிக்கு நெல்லை மார்க்கமாக புறப்படும் (வண்டி எண் 56736) பயணிகள் ரயிலிலும், அன்றைய தினமே நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு தென்காசி மார்க்கமாக புறப்படும் (வண்டி எண் 56735) பயணிகள் ரயிலிலும் கூடுதலாக தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பால், தினசரி இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர் மிகுந்த பயனடைவார்கள் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications