நெல்லை டூ சென்னை வந்த ஆம்னி பஸ்சில் அலறிய தம்பதி.. சாப்பிட சென்று வருவதற்குள் 40 பவுன் நகைகள் அபேஸ்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ்சில் பயணித்த தம்பதியின் 40 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கயத்தாறு அருகே சாலையோர ஓட்டலில் சாப்பாடுக்காக பஸ் நிறுத்தப்பட்டிருந்தபோது, கைப்பையை பஸ்சிலேயே வைத்து விட்டு தம்பதி சாப்பிட சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் தினமும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகள் சாப்பிடுவதற்காக சாலையோர கடைகளில் பஸ்கள் நிறுத்தப்படும் போது, மர்ம ஆசாமிகள் சிலர் பஸ்சுக்குள் புகுந்து பயணிகளின் உடைமைகளை திருடிவிட்டு செல்லும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

Nellai to Chennai omni bus - 40 sovereigns gold jewelry stolen - while the couple had stepped out to eat

ஓட்டலில் நின்ற ஆம்னி பஸ்

அந்த வகையில் சென்னையில் வசித்து வரும் தன் மகனை பார்ப்பதற்காக நெல்லையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்ட தம்பதியின் 40 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

நெல்லை பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவரது மனைவி ஜூலியட். சென்னையில் உள்ள மகனின் வீட்டுக்கு செல்வதற்காக இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு நெல்லையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டுள்ளனர். ஆம்னி பஸ் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்து கரிசல் குளம் அருகே பயணிகள் சாப்பாடு சாப்பிடுவதற்காக சாலையோரம் இருந்த ஓட்டல் ஒன்றில் நின்றது.

40 சவரன் தங்க நகைகள் மாயம்

பஸ்சில் இருந்த பயணிகள் பலரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். ஜஸ்டின் - ஜூலியட் தம்பதியினரும், உடைமைகளை பஸ்சில் இருக்கையிலேயே வைத்துவிட்டு சாப்பிட சென்றனர். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருக்கையில் இருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதன் உள்ளே 40 சவரன் தங்க நகைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பஸ் டிரைவரும் அனைத்து பயணிகளுடன் கயத்தாறு காவல் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது போலீசார் பஸ்சில் ஏறி பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் சோதனை செய்தனர். ஆனால் பயணிகள் யாரிடமும் நகைகள் இல்லை. இதையடுத்து பஸ் சாப்பாடுக்காக நிறுத்தப்பட்ட ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் கைப்பையை இருக்கையிலேயே வைத்து விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது.

பயணிகள் கோரிக்கை

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இதே சாலையோர ஓட்டல் அருகே நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவரது ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. உடைமையை பஸ்சிலேயே வைத்து விட்டு சாப்பிட சென்ற நிலையில் திரும்பி வந்து பார்க்கும் போது பை மாயமாகி இருந்தது. அனைத்து சாலையோர ஓட்டல்கள் மற்றும் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+