நேபாள வெள்ளம்.. முதல்வர் விஜய் அதிர்ச்சி! சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் தமிழர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இச்செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகம் வாயிலாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓடும் போட்டி கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரும்பு பாலங்கள் கூட அடித்து செல்லப்பட்டன. பாலங்கள், கட்டிடங்கள், கிராமத்தையே கூட வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனால் இதில் எவ்வளவு பேர் சிக்கினர் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Nepal floods

முதல்வர் விஜய் அறிவிப்பு

இது மட்டுமின்றி தமிழகம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றவர்களும் இந்த பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.

உதவி எண்கள்

தமிழ்நாடு இல்லம், டெல்லி, - 9289516712
இந்தியாவிற்குள் என்றால் - 1800 309 3793
வெளிநாடு தொடர்புக்கு - +91 8069009900, +91 8069009901

அமைச்சர் வினோத் ட்வீட்

முன்னதாக அமைச்சர் வினோத் வெளியிட்ட பதிவில், நேபாளத்தின் ரசுவா பகுதியில் வெள்ளப்பெருக்கால் சிக்கியுள்ள 36 பெண்கள் உட்பட 57 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு சார்பில், மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி, சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹெலிகாப்டர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் பாதுகாப்பே தமிழக அரசின் முதன்மையான பொறுப்பு, சிக்கியுள்ள அனைவரும் பத்திரமாக மீட்கப்படும் வரை தமிழக அரசு தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும்" என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+