ராகுல் கஷ்டத்தில்.. ஹாயாக கார்த்தி சிதம்பரம்? அப்போ நெட்பிளிக்ஸ்.. இப்போ வேர்ட்லி.. கடுகடு நெட்டிசன்
சென்னை: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் எம்பி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிக்கும் வேர்ட்லி விளையாட்டு குறித்து போட்ட பதிவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவரான ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்து போராடாமல், இப்படியா வேர்ட்லி வார்த்தை விளையாட்டு பதிவுகளை போடுவது என்று சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம் போட்ட வேர்ட்லி பதிவு என்ன? ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஏன் விமர்சனம்
நியூயார்க் டைம்ஸின் வேர்ட்லி ஒரு சிறப்பு வார்த்தை விளையாட்டு ஆகும், இந்த விளையாட்டு ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும் எளிமையான விளையாட்டு. இது பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் ஐந்து எழுத்து ஆங்கில வார்த்தையை யூகிக்க வேண்டும் என்று கேட்கும். அதற்கு விடை தர வேண்டும். உலகம் முழுவதும் வேர்ட்லி கேம் மிகவும் த்ரில்லாகவும் பிரபலமாகவும் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கேமை தீர்க்க முடியும் என்பதால் திரில்லாக இருக்கும். இந்த விளையாட்டின் ஷ்கிரீன் சாட்டைத்தான் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

நெட்பிளிக்ஸ்
கடந்த ஆண்டு ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்த செய்தி வந்து கொண்டிருந்த போது கார்த்தி சிதம்பரம் நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம் என்று கேட்டதற்கு அப்போது பெரும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஆங்கில அறிவை வளர்ப்பது குறித்து வேர்ட்லி விளையாட்டு ஷ்கிரீன்ஷாட்டை போட்டதால் கார்த்தி சிதம்பரத்தை விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

நெட்டிசன்கள் கேள்வி
தங்களின் தேசிய தலைவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை முன்னின்று நடந்தாமல் ட்விட்டரில் இப்படியா வேர்ட்லி விளையாடுவது என்று பலரும் சமூக வலைதளங்களில் கார்த்தி சிதம்பரத்தை விமர்சிக்கிறார்கள். அதேநேரம் கார்த்தி சிதம்பரம் வேர்ட்லி பதிவிற்கு பிறகு தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் ஊடகங்களிலும் ராகுல் காந்திக்கு நடந்தது அநீதி என்று பேசி வருகிறார்.

சனி ஞாயிறு விடுமுறையா?
இதனிடையே காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை போராட்டத்தை அறிவித்திருப்பதையும் விமர்சிக்கிறார்கள் சில பாஜக ஆதரவு நெட்டிசன்கள். தங்கள் தேசிய தலைவருக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கும் போது, அதற்கு கூட சனி மற்றும் ஞாயிறு விடுமுறைவிட்டுவிட்டு திங்கள்கிழமையா போராடுவது என்று சமூக வலைதளங்களில் பாஜகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

அநீதி நடந்துள்ளது
அதேநேரம் ராகுல் காந்திக்கு நடந்தது அநீதி என்று பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டங்களை எழுப்பி வருகிறார்கள். மொத்த சமூக வலைதளமும் கடந்த 3 நாட்களாக ராகுல் காந்தி தான் பேசப்படுகிறார். ராகுல் காந்திக்காக அனைத்து எதிர்க்கட்சிகளுமே கடும் கண்டனங்களை வெளிப்படுத்தி உள்ளன.

தன்னெழுச்சி போராட்டம்
காங்கிரஸ் கட்சியினரும் தன்னெழுச்சியாக நாடு முழுவதும் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். நேற்று பல இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்தது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வரும் திங்கள் அன்று பெரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications