யாரையும் தாழ்த்தாதீங்கன்னு சொல்லிட்டு.. சபாபதி போஸ்டர்ல என்ன பண்ணியிருக்கீங்க.. பொங்கிய நெட்டிசன்கள்
சென்னை: யாரையும் உயர்த்திக் காட்ட யாரையும் தாழ்த்திக் காட்டாதீங்க என ஜெய்பீம் சூர்யாவுக்கு காமெடி நடிகர் சந்தானம் அறிவுறுத்தியுள்ள நிலையில் நாளை மறுநாள் வெளியாகும் அவரது சபாபதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றுள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
Recommended Video
பெட்ரோல் டீசல் விலை, விலை வாசி உயர்வு என மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வந்ததால் அதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறி தற்போது எங்கு திரும்பினாலும் ஜெய்பீம் பற்றியே பேசப்படுகிறது.
இந்த படம் குறித்து வடஇந்திய ஊடகங்களும் பேசும் அளவுக்கு பேசு பொருளாகிவிட்டது. இந்த படத்தில் பழங்குடியினர் சமூகத்தின் பிரச்சினைகளை சொல்வதற்காக வன்னியர் சமூகத்தை இழிவாக சித்தரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜோதிகா
நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இந்நிலையில் பலர் சூர்யாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் திரைத் துறையை சேர்ந்த காமெடி நடிகர் சந்தானமோ ஜெய்பீம் சூர்யாவுக்கு எதிராக இருக்கிறார். அவர் நடித்து நாளை மறுநாள் வெளியாகவுள்ள திரைப்படமான சபாபதி குறித்து ஒரு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

ஜெய்பீம்
இதில் நடிகர் சந்தானம் கலந்து கொண்டு ஜெய்பீம் குறித்து பேசினார். அதில் ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நாம் சொல்றது இதுதான்.. நாம ஒரு கருத்தை சொல்றோம். பேசறோம்னா நான் இந்துயிசத்தை பற்றி பேசற.. இந்துன்னு பேசறன்னா நான் சூப்பர்.. உயர்ந்ததுன்னு என்ன வேணும்னாலும் பேசலாம். அது பிரச்சனை கிடையாது. ஆனால் அடுத்தவங்கள புண்படுத்துற மாதிரி அவங்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம்.

கிறிஸ்துவ
இந்து மதத்தை தூக்கி காட்டுங்கோ, அல்லது எது பிடித்திருக்கிறதோ அதை காட்டுங்கள். ஆனால் அடுத்தவங்களை தாழ்த்தி காட்டாதீங்க. இந்து மதம் சூப்பர்னா, கிறிஸ்துவ மதத்தை தாழ்த்தக் கூடாது என பேசியிருந்தார். இதையடுத்து சமூகவலைதளங்களில் சந்தானமும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

பாமக நிறுவனர்
மாநிலங்களவை எம்பி அன்புமணி ராமதாஸின் மகள் திருமண விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் சந்தானம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தற்போது வைரலாக்கி, இது போல் சந்தானம் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் என விமர்சித்து வருகிறார்கள். அது போல் ஒருவரை உயர்த்த மற்றவரை தாழ்த்த கூடாது என கூறும் சந்தானம் தனது காமெடிகளில் ஒருவரை உயர்த்த இன்னொருவரை தாழ்த்தி பேசுகிறாரே என்கிறார்கள்.

மாற்றுத்திறனாளி
அண்மையில் இவர் நடித்த டிக்கிலோனா படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை சந்தானம் சைடு ஸ்டாண்ட் என பேசியதற்கு மாற்றுத்திறனாளி சங்கங்கள் மிகவும் வேதனை தெரிவித்து கண்டனமும் தெரிவித்திருந்தன. இப்படி காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளியை கிண்டலாக பேசியிருந்த சந்தானம் சூர்யாவுக்கு அறிவுரை வழங்க என்ன முகாந்திரம் இருக்கிறது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

சபாபதி படம்
அது போல் நாளை மறுநாள் ரிலீஸாகும் சபாபதி படத்தில் கூட சந்தானம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சுவற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர் என எழுதப்பட்டுள்ளது. அங்கு கிண்டலாக சந்தானம் நின்று கிண்டலாக சிறுநீர் கழிப்பது போல் உள்ளதை நெட்டிசன்கள், ஒரு மாநில உரிமைக்கான போராட்டத்தை சிறுநீர் கழித்து கொச்சைப்படுத்திவிட்டு ஜெய்பீம் சூர்யாவுக்கு அட்வைஸ் செய்வது எந்த விதத்தில் நியாயம் என கேட்டுள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications