எதுக்குமா அப்பாவோட கழுத்தை அறுக்க போன.. எல்லாரும் எங்கப்பாவை சங்கரு சங்கருனு சொன்னாங்க #aditijokes
சென்னை: விருமன் பட ஷூட்டிங்கில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கூறியதாக சொல்லப்படும் மொக்கை ஜோக்ஸை நடிகர்கள் கார்த்தியும் நடிகர் சூரியும், ஆஹா ஓஹோ என பாராட்டி கூறியிருந்த நிலையில தற்போது அதிதிஜோக்ஸ் என இணையதளத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில் அதிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோக்ஸாக சொல்லினார். அவர் கூறிய ஜோக்ஸ் எல்லாமே சொந்தமாக யோசித்தது. அதில் ஒன்றை கூறுகிறேன், ஒரு பொண்ணு அவங்க அப்பாவை தள்ளிவிட்டுடிச்சி, அந்த பொண்ணு பேரு என்ன என கேட்டார்.
நான் சூரிகிட்ட போய் கேட்டேன். அதற்கு அவரும் எனக்கு தெரியலை என்றார், 15 நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து சார் என்ன ஆன்ஸர் சொல்லவா என கேட்டார், நானும் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாது என்பதால் சூரியிடம் கேட்டேன், அப்போது யோசித்து ஒன்றும் விளங்கவில்லை. சரி என பதில் சொல்லுமா என்றேன், அதற்கு அந்த பொண்ணு பேரு புஷ்பா என கூறி இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என நாங்கள் அதிர்ந்தோம் என்றார். சாதாரண மொக்கை ஜோக்ஸை எப்படித்தான் நடிகர் கார்த்தி இப்படி பில்டப் செய்தாரோ என நெட்டிசன்கள் மொக்கை ஜோக் அதிதி என்றே பெயர் வைத்துள்ளனர். #Aditijokes என்ற ஷேட்டேக் டிரென்டாகி வருகிறது. அவற்றில் சில வாசகர்களுக்காக:

கழுத்தை அறுக்க
எதுக்குமா உங்க அப்பாவோட கழுத்தை அறுக்க போன ?
எல்லாரும் எங்கப்பாவ பாத்து சங்கரு சங்கருனு சொன்னாங்க சார் அதான் ! என இந்த நெட்டிசன் தெரிவிக்கிறார்.

சும்மா பாடிகிட்டே
ஏதோ ஒரு தடவ பாடுன ரசிச்சோம். போற இடத்துககுலாம் அதயே பாடிட்டு இருக்க என்கிறார் இந்த வலைஞர்

யூடியூப் சேனல்
அண்ணே புதுசா யூடியூப் சேனல் ஆரம்பிச்சுருக்கேண்ணே
எதுக்குடா
அதிதி ஜோக்ஸ் எல்லாம் அதுல போடலாம்னு இருக்கேண்ணே!

பீட்ரூட்
ஒரு ரூட்ல மட்டும் வண்டிங்க போக முடியாது...
எந்த ரூட்ல.. ?
பீட்ரூட்ல.. என்கிறார் இந்த நெட்டிசன்.

2 பழம்
2 பழத்துல மட்டும் ஜூஸ் போட முடியாது? எந்த பழத்துல
பொன்னம்பலம், அப்பளம் என்கிறார் இந்த வலைஞர்

சிம் கார்டு
மரமே இல்லாத காடு என்ன காடு தெரியுமா??
சிம் காடு(Sim card).. என்கிறார் இந்த வலைஞர்.

தோசை
தோசை வேகல 'னா திருப்பி போடலாம்.. ஆனா இட்லி வேகல 'னா திருப்பி போட முடியாது.. என்கிறார் இந்த வலைஞர்.

கடிஜோக்
@AditiShankarofl
ஏம்மா ஜோக் சொல்லிட்டு அந்த ஆள ஏன் கடிச்சு வச்ச ?
அவருதான் கடிஜோக் சொல்ல சொன்னாரு... #AditiJokes #aditijokes என்கிறார் இந்த வலைஞர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications