சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆயிரம் விளக்கு தொகுதியுடன் இணைந்த சின்னத்தம்பி கிளைமாக்ஸ்.. யார் பார்த்த வேலை இது! வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதிகளின் முடிவுகள் வரவர சின்னத்தம்பி கிளைமேக்ஸ் போல் மீம்ஸ் போட்டது சமூகவலைதளங்களில் வைரலாகியது.

திமுக, காங்கிரஸ் என இரு கட்சிகள் தாண்டி பாஜகவில் ஐக்கியமாகிய குஷ்புவுக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக கொடுத்தது.

எத்தனை பொய்.. என்னென்ன சதி.. எல்லாம் வீழ்ந்தது.. விரட்டப்பட்டது பாஜக.. திருமா ஆவேசம் எத்தனை பொய்.. என்னென்ன சதி.. எல்லாம் வீழ்ந்தது.. விரட்டப்பட்டது பாஜக.. திருமா ஆவேசம்

இந்த வாய்ப்பை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு தொகுதியின் ரிசல்ட்கள் வரத் தொடங்கின.

34 ஆயிரம் வாக்குகள்

34 ஆயிரம் வாக்குகள்

அப்போது ஆரம்பித்திலிருந்தே குஷ்பு பின்னடைவை சந்தித்து வந்தார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட குஷ்பு வெல்வார் என யாரும் சொல்லவில்லை. இந்த நிலையில் குஷ்பு 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

இதையடுத்து அவர் குறித்த மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் சின்னத்தம்பி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பிரபு ஊரை விட்டு செல்லும் போது குஷ்பு தன்னையே வருத்திக் கொண்டு நீ எங்கே என் அன்பே எனும் பாடலை பாடுவார்.

கண்ணாடி துகள்கள்

இந்த பாடலில் கண்ணாடித் துகள்கள் மீது அவர் நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதை வைத்து மீம்ஸ்கள் பறக்கின்றன. அதில் ஒவ்வொரு கண்ணாடித் துண்டில் குஷ்பு கால் வைக்கும் போதும் முதல் சுற்று, இரண்டாவது சுற்று என எழுதப்பட்டிருந்தன.

அரசியல்

சீட்டுக்காக கட்சி மாறும் உங்களுக்கு சித்தாந்தத்தின் வலிமை தெரியாது... மக்களின் தீர்ப்பு மகத்துவமானது மத அரசியல் செய்யும் உங்களுக்கு எப்படி தெரியும்...

குஷ்புவுக்கு பாராட்டு

கிண்டல் செய்துள்ள அதே வேளையில் குஷ்புவை சிலர் பாராட்டியும் உள்ளார்கள். அதில் ஒருவர் குஷ்பு, நீங்கள் சிறப்பாகவே செயல்பட்டீர்கள். உங்களை எம்எல்ஏவாக ஏற்க ஆயிரம் விளக்கிற்கு தகுதியில்லை. நீங்கள் ஸ்மிருதி இரானியின் மாடலை பின்பற்றி 2026 இல் வலிமையான நபராக மீண்டு வாருங்கள் என தெரிவித்தார்.

வெற்றிப்படிக்கட்டு

அக்கா இது ஒரு தோல்வியே அல்ல உங்களுக்கு ..! இது ஒரு வெற்றிக்கான படிக்கெட்டு என்று நினைத்துக்கொள்ளுங்கள் ..! மத்திய அமைச்சராக வர வாழ்த்துக்கள் ...!

English summary
Netisans praises and teases Khusbu Sundar for her effort and failure in Thousand lights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X