இது தளபதி வாய்ஸா! பேபி அபிதா பேகம் கூட நம்பாதே! காஞ்சிபுரம் விஜய் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை
சென்னை: நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என அவருடைய நீலாங்கரை வீட்டு வாசலில் கதறி அழுத சிறுமியிடம் விஜய் போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது விஜய்யின் குரலே இல்லை என பலர் தெரிவிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலை விட ரீச் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் இளம் ரசிகர்களும் உள்ளனர்.

சின்ன குழந்தைக்கு கூட விஜய்யை மிகவும் பிடிக்கும். அப்படியிருக்கும் போது அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அபிதா பேகம் என்ற சின்னக்குழந்தை தனது மழலையால் விஜய் அங்கிள் வீட்டுக்கு வர வேண்டும் என அடம்பிடித்தது.
தீ தீ தளபதி பாடல் வரியை பாடி, அதில் நடித்த விஜய் அங்கிள் வர வேண்டும் என அந்த குழந்தை கேட்டது. இந்த தகவல் அறிந்த நடிகர் விஜய் அந்த குழந்தையுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். அது போல் விஜய்யையும் பலர் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்ற ஒரு சிறுமி, அவருடைய வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பார்த்து, எப்படியாச்சும் என்னை கூப்பிடுங்க அண்ணா, எனக்கு அழுகையா இருக்கு. நீங்கள் கூப்பிடுங்கன்னு நம்பிக்கையா இருக்கேன். தேங்க்யூ, தளபதிய பார்க்க காஞ்சிபுரத்துல இருந்து வந்திருக்கேன் என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலானது. இதை பார்த்த பலர் முகம் சுளித்தனர். இது போல் ஒரு நடிகரின் வீட்டு முன் வந்து அவரை பார்த்தே தீரவேண்டும் என அடம்பிடித்தால் இந்த வீடியோவை பார்த்து தினந்தோறும் நிறைய பேர் வந்தால் என்னவாவது? நடிகர்களுக்கு பிரைவசி வேண்டாமா என கேள்வி எழுப்பி அந்த சிறுமயை திட்டி வந்தனர்.
இந்த நிலையில் விஜய் வீட்டு வாசல் முன்பு அழுத சிறுமியுடன் விஜய்யை வைத்து தனியார் சேனல் ஒன்று பேச வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அந்த சிறுமியின் தாய், தந்தை, சிறுமி அமர்ந்திருக்கிறார்கள். சிறுமி ஸ்பீக்கரில் போட்டு பேசியுள்ளார். எப்படி இருக்கீங்கள் என அந்த சிறுமி கேட்க அதற்கு விஜய்யோ நான் நல்லா இருக்கேன் ம்மா நீங்கள் எப்படி இருக்கீங்க என கேட்கிறார்.
அந்த சிறுமி நான் உங்களை ஒரு முறை பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் அண்ணா என்கிறார். அதற்கு விஜய்யோ நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அது முடியட்டும் உங்களை பார்க்கிறேன் என கூறி இணைப்பை துண்டிக்கிறார். விஜய் தம்முடன் பேசிவிட்டார் என்ற உச்சபட்ச ஆனந்தத்தில் அந்த பெண்ணுக்கு கை, கால்கள் உதறலாக இருக்கிறது, கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் கொட்டுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த ஆடியோவில் இருப்பது விஜய் வாய்ஸே இல்லை என நெட்டிசன்கள் சொல்கிறார்கள். ஒருவருடைய உணர்வுகளுடன் விளையாட வேண்டும். அந்த ஆடியோவில் பேசுவது விஜய்யே இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது அந்த சிறுமிக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம் என ஒரு நெட்டிசன் குறிப்பிட்டிருக்கிறார்.

அது போல் இன்னொரு நெட்டிசனும் இது விஜய்யின் வாய்ஸே இல்லை என கூறி, விஜய்யை போல் நடிப்பவரின் படத்தை போட்டு இது டூப் வாய்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆடியோ மெசேஜை கேட்ட இன்னொரு நெட்டிசன் இது விஜய் வாய்ஸே இல்லை என அடித்து கூறியுள்ளார். சிலர் வீம்புக்கென இது விஜய்யின் வாய்ஸ்தான் என கூறி வருகிறார்கள். பல்லாவரத்தை சேர்ந்த சின்னக்குழந்தை விஜய்யை பார்க்க வேண்டும் என கூறிய போது விஜய் வீடியோ காலில் வந்தார். அது போல் இந்த சிறுமிக்கும் வீடியோ காலில்தான் அவர் வந்திருக்க வேண்டும். வந்திருப்பார்! காஞ்சிபுரத்தில் இருந்து தன்னை பார்க்க வந்த சிறுமியை நேரில் பார்க்க வர சொல்லாவிட்டாலும் குறைந்தது வீடியோ காலிலாவது பார்த்திருப்பார். விஜய் தரப்பினர் உறுதி செய்தால் மட்டுமே இது விஜய் வாய்ஸா இல்லை வேறு யாராவது அந்த சிறுமியை நம்ப வைத்தார்களா என்பது தெரிய வரும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications