சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகம்.. இந்தியாவில் எங்கும் இல்லை.. மாஸ்டர் பீஸ் தலைவரே!

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது. அதிலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வற்புறுத்துவோம் என்ற அறிவிப்பு மக்கள் மனதை தொட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி நேற்றைய தினம் திமுக தனது கட்சி போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இது ட்விட்டரில் டிரென்டிங்கில் இருந்தது. அவற்றில் சில வாசகர்களுக்காக...

ஒதுக்கீடு

கோயில்களை புதுப்பிக்க ரூ 1000 கோடி ஒதுக்கீடு, மசூதிகளை புதுப்பிக்க ரூ 200 கோடி, தேவாலயங்களை புதுப்பிக்க ரூ 200 கோடி ஒதுக்கீடு எங்களுக்கு இது போதும்.

மாஸ்டர் பீஸ்

முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை என்ற அறிவிப்பு சரியான அறிவிப்பு. மாஸ்டர் பீஸ் தலைவரே என்கிறார் இந்த வலைஞர்.

75 சதவீத இடஒதுக்கீடு

தனியார் நிறுவனங்களில் தமிழ் மக்களுக்கு பணிக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க திமுக நடவடிக்கை எடுக்கப்படும்- திமுக தேர்தல் அறிக்கை.

ஆனால் தேர்தல் வியூகத்தை அமைக்க பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிரோஷருக்கு திமுக ஒப்பந்தம் செய்கிறது. முதலில் உங்கள் கட்சியில் இது போன்ற திட்டங்களை அமல் செய்துவிட்டு பிறகு மாநிலங்கள் குறித்து பேசுங்கள் என்கிறார் இந்த இளைஞர்.

நடைபாதைவாசிகள்

நடைபாதைவாசிகள் தங்குவதற்கு இரவு நேர காப்பகம் அமைக்கப்படும் என திமுக அதிரடி அறிவிப்பு.

இது போன்ற திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது. இது நிறைவேற்றப்பட்டால் நடைபாதைவாசிகளுக்கு இரவு காப்பகம் அமைத்த முதல் நாடு தமிழகமாக திகழும். இதன் மூலம் சாலையோரம் படுத்திருப்போர் விபத்துகளாலும், குளிரினாலும், மழையாலும் உயிர் இழப்பதும் தடுக்கப்படும்.

தேர்தல் அறிக்கை

திமுகவின் கதாநாயகன் தேர்தல் அறிக்கைதான். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் டேப் வழங்கப்படும்.

ஆட்டோ டிரைவர்கள்

ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்க திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

ஆட்டோ டிரைவர்கள் குறித்து கவலைப்படும் ஒரே கட்சி திமுக.

சட்டம்

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்- கேம் சேஞ்சரான திமுக தேர்தல் அறிக்கை.

English summary
Netisans shared their comments on DMK Manifesto 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X