Memes சர்வர் சூடாகுது.. கிராஷ் ஆகிவிடும்!.. தேடினது போதும்.. சுந்தர் பிச்சை உருக்கம்!.. வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, தேடி தேடி கூகுள் சர்வரே சூடாகுது, தமிழக மக்களுக்கு சுந்தர் பிச்சை வேண்டுகோள் என தெறிக்கிறது மீம்ஸ்கள்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 -க்கு மேல் விற்பனையாகிறது. அதாவது 130 முதல் 150 வரை சில்லறை விலையிலும் ரூ 100 முதல் 130 வரை மொத்த விலையிலும் விற்கப்படுகிறது.

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி என கூகுளில் தேடும் அளவுக்கு அதன் விலை ஆப்பிள், பெட்ரோல் டீசல் விலைக்கு நிகராக வந்துவிட்டதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் அதிகமாக உலா வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

ஆப்பிள் சாம்பார்

ஆப்பிள் சாம்பார்

கணவன்- என்ன குழம்பு ஒரே இனிப்பா இருக்கு..
மனைவி- அதுவாங்க தக்காளியை விட ஆப்பிள் விலை குறைவா இருந்திச்சி அதான் ஆப்பிள் சாம்பார் வச்சிட்டேன்.

சுந்தர் பிச்சை உருக்கம்

சுந்தர் பிச்சை உருக்கம்

தக்காளி இல்லாமல் எப்படி சமையல் செய்வது என்று கூகுளில் தேட வேண்டாம். சர்வர் சூடாகுது, கிராஷ் ஆகிவிடும்போல இருக்குது, சுந்தர் பிச்சை தமிழ்நாட்டு மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

மொரட்டு ஆஃபர்

மொரட்டு ஆஃபர்

டேய் என்னடா இது மொரட்டு ஆஃபர்
50ரூபாய்க்கு தக்காளி சட்னி வாங்கினால் 4 இட்லி இலவசம்னே

பிரியாணி

பிரியாணி

தக்காளிக்கு பிரியாணி இலவசம்
பிரியாணிக்கு தக்காளி இலவசம்

1 கிலோ தக்காளி கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும்.

2 சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம்- ஆம்பூர் பிரியாணி, சோத்துப்பாக்கம், வந்தவாசி

விவசாயி

விவசாயி

தக்காளி விலை ₹140 ஏறிடுச்சு.. நாங்க எப்படி வாங்குறதுனு எல்லோரும் புலம்புறாங்க..

விளையிற விவசாயிக்கு இதுல எவ்வளவு கிடைச்சுட போகுது.. ஒரு மயிறும் இல்லை.

இடைத்தரகரும்,கடைகாரனும் தான் நல்லா சம்பாதிக்குறாங்க.
#tomoto

யாருடா இவன்

யாருடா இவன்

பார்த்ததும் சிரிச்சுட்டேன் மக்கா தக்காளி

யாருடா இவன் நமக்கே டப் கொடுக்கிறான்

எனக்கு வந்தா தக்காளி சட்னி

எனக்கு வந்தா தக்காளி சட்னி

இனிமே உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா #தக்காளி சட்னியா னு கூட கேக்க முடியாதுல

தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி

#தக்காளி சட்னி சாப்டுற
நான் எங்க!?

#தேங்காய் சட்னி சாப்டுற
நீ எங்க!?

தக்காளி சட்னி

தக்காளி சட்னி

துரைக்கு இட்லிக்கு தொட்டுக்க #தக்காளி சட்னி கேக்குதோ...*

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+