சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது பாஜகவில் இணைகிறீர்களா?.. அப்ப சங்கி, மங்கினு இனி யாரை திட்டுவீங்க.. நெட்டிசன்கள் அதகளம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் இணைந்துவிட்டால் சங்கி, மங்கினு இனி யாரை திட்டுவீர்கள் என நெட்டிசன்கள் அதகளம் செய்து வருகிறார்கள்.

நடிகை குஷ்பு எப்போதும் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பவர். நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பார். குறிப்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

அதிலும் பிரதமர் என்றும் பாராமல் மோடியை விமர்சனம் செய்துள்ளார். பொதுவாக பாஜகவினரை அவர் அந்த பெயரை சொல்லி அழைத்ததே இல்லை. சங்கிக்கள் என்றே குறிப்பிடுவார்.

சாதி வெறியில் சிக்கிய ராஜேஸ்வரி.. அவரையும் விடாத பாஜக.. டக்குன்னு கட்சியில் சேர்த்து இன்ப அதிர்ச்சி!சாதி வெறியில் சிக்கிய ராஜேஸ்வரி.. அவரையும் விடாத பாஜக.. டக்குன்னு கட்சியில் சேர்த்து இன்ப அதிர்ச்சி!

பாஜகவில் இணைப்பு

பாஜகவில் இணைப்பு

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் சில உள் கட்சி அரசியல் காரணமாக அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் சேரவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. அதை திட்டவட்டமாக மறுத்த குஷ்பு ஒரு ட்வீட்டுக்கு ரூ 2 வாங்கிக் கொண்டு தான் பாஜகவில் இணைவதாக போடுகிறார்கள் என்றார்.

நாற வாய்

நாற வாய்

ஆனால் அது வேற வாய் இது நாற வாய் என்பது போல், இன்று நிலை அப்படியே தலைகீழ், காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டார். இதையடுத்து அவர் டெல்லிக்கு நேற்று இரவு சென்றுள்ளதால் அவர் நிச்சயம் பாஜகவில் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவில் இணையும்

பாஜகவில் இணையும்

#குஷ்பு திமுகவில் இருந்த போதும், காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரலை
அதனால்தான், பாஜகவில் இணைகிறார். நேற்றுவரை #பாசிசமோடி யை இகழ்ந்தவர் நாளை முதல் துதி பாடுவார் என்கிறார் இந்த வலைஞர்.

தமிழகம்

தமிழகம்

நீங்கள் கட்சி தாவ திட்டமிட்டுள்ளீர்களா. வெளிப்படையாக சொல்லுங்கள். கட்சி தாவுபவர்களை வாழ வைத்ததாக தமிழக அரசியலில் வரலாறே இல்லை. இதற்கு சிறந்த உதாரணம் ராமதாஸ். மோசமான பாஜகவில் இணைவதற்கு முன்னர் ஒன்றுக்கு இரு முறை யோசனை செய்யுங்கள். இல்லாவிட்டால் அரசியலில் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள் என்கிறார் இந்த வலைஞர்.

சங்கிகள்

சங்கிகள்

பிஜேபியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் போதே, "இரண்டு ரூபாய் சங்கிகள்" என்று அசிங்கபடுத்தியது தான் ஹைலைட்டே என்கிறார் இந்த வலைஞர். அது போல் சிலர், பாஜகவில் இணைந்துவிட்டால் இனி சங்கிக்கள்னு யாரை திட்டுவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Netisans shared twitter comments about the joining of Kushboo in BJP. More are against to her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X