ஊரே கொண்டாடுற வேட்பாளராக இருக்குறதுல வேற லெவல்!.. ஷாநவாஸை கொண்டாடும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் நாகை சட்டசபைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததை அடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்,

Recommended Video

    சென்னை: விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… வன்னியரசு, சிந்தனை செல்வன், ஷா நவாஸ் போட்டி!

    சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆளூர் ஷாநவாஸ் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களாக ட்விட்டரில் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

    இதில் நாகை சட்டசபைத் தொகுதியில் போட்டியிட ஆளூர் ஷாநவாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ட்விட்டரில் அவருக்கு ஆதரவுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன.

    அநீதிக்கு எதிரான அறச்சீற்றம்

    தெளிவான சிந்தனை
    சமரசமற்ற சமூகநீதிப் பார்வை
    தாங்கொண்ட கொள்கையில் உறுதி
    அநீதிக்கு எதிரான அறச்சீற்றம்
    போன்ற சிறந்த குணங்கள் கொண்ட தாங்கள் வெல்வது மிக முக்கியமானது.
    தங்களை வெற்றிபெற செய்வது மக்களின் கடமை......
    வாழ்த்துகள் சகோதரர் ஷா நவாஸ் அவர்களே.. வெற்றி நமதே

    பக்கத்து ஊர் காரைக்கால்

    நான் நாகைக்கு பக்கத்து ஊர் காரைக்கால் காரன், அடிக்கடி நாகை சென்று வருபவன்..... மக்களின் நாடிதுடிப்பு அறிந்து கூறுகிறேன்.... உங்கள் வெற்றி உறுதியாகி விட்டது.... உங்களால் பின்தங்கிய நாகைக்கு நன்மைகள், வளர்ச்சி பணிகள் பல கிடைக்கும்.... வாழ்த்துக்கள் தோழர்.

    சிந்தனைச் செல்வன்

    கொஞ்சும்
    தமிழுக்கு
    சிந்தனைச் செல்வன்..!

    கொள்கை
    விளங்க வைக்க
    பாலாஜி..!!

    கோட்பாட்டு
    அரசியலுக்கு
    கௌதம சன்னா..!

    தமிழ்தேசிய
    வகுப்பெடுக்க
    வன்னியரசு..!!

    சமத்துவம்
    எடுத்துரைக்க
    ஷானவாஸ்..!

    சாதிமறுப்பிற்கு
    பனையூர் பாபு..!!

    ஆறும்
    பெயரல்ல
    எழுச்சித் தமிழர்
    கரங்கள்..!

    வேட்பாளர்

    ஊரே கொண்டாடுற வேட்பாளராக இருக்குறதுல வேற லெவல்!

    மகிழ்ச்சியான செய்தி

    நாகை சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் ஆளூர் ஷநவாஸ் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..உங்கள் குரல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் ...எங்களை போன்ற தோழர்களுக்கு அதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு ஒன்றும் இல்லை..வெற்றி நமதே..ஜெய் பீம்..

    வாழ்த்துகள்

    பொறுத்தார் பூமி ஆள்வார் ..
    மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோ

    கருத்தியல் அசுரன்

    வாதத்தால் வாயடைக்க வைக்கும் கருத்தியல் அசுரனுக்கு வாழ்த்துக்கள்...

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+