பனையூர் அலுவலகத்தில் விஜய் ஏற்றிய தமிழக வெற்றி கழகத்தின் கொடி? டிரெண்டாகும் போட்டோ
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா வரும் 22ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக இன்றைய தினம் பனையூரில் இருக்கும் விஜய் கட்சி அலுவலகத்தில் கொடி ஒன்று பறந்துள்ளது. விஜய் இந்த கொடியை ஏற்றிய நிலையில், இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடச்சத்திரமாக இருக்கும் விஜய் சமீபத்தில் தான் அரசியல் தலைவராக அவதாரம் எடுத்தார். அறிவிப்புடன் நிற்காமல் ஒவ்வொரு வேலையையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதற்கிடையே அடுத்தகட்டமாக வரும் 22ம் தேதி விஜய் கட்சிக் கொடி அறிமுக விழா நடைபெற உள்ளது. இதற்காக அங்கே 45 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டு இருக்கிறது.
விஜய் ஏற்றிய கொடி: இதற்கிடையே பனையூரில் உள்ள விஜய் கட்சி அலுவலகத்தில் இன்று கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த கொடியில் நடுவில் விஜயின் போட்டோவும் இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
வரும் 22ம் தேதி கொடி அறிமுக விழா நடைபெறுகிறது. விஜய் கட்சி அலுவலகத்தில் இதற்காக 45 அடி உயரத்தில் தனியாகக் கொடிக் கம்பமும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடிக் கம்பத்தில் ஏற்றித் தான் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த விழாவுக்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
உண்மை என்ன: இந்தச் சூழலில் பிஎம்டபிள்யூ சொகுசு காரில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். கருப்பு நிற உடை அணிந்திருந்த விஜய்யை, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது தான் விஜய் அங்கிருந்த கொடியை இரண்டு முறை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். ஒத்திகையாகவே இந்த கொடி ஏற்றப்பட்டதாகத் தெரிகிறது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இல்லை என்றே கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி எது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
இன்று பவுர்ணமி என்பதால் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்திருந்தார். கொடியைப் பூஜை செய்த பின்னரே ஒத்திகை பார்க்கப்பட்டு இருக்கிறது. விஜய் கட்சி அலுவலகத்திற்கு வருவது, கொடியை ஏற்றிப் பார்க்க நடக்கும் ஒத்திகை, அங்கிருந்து அவர் சொகுசு காரில் கிளம்புவது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் இப்போது டிரெண்டாகி வருகிறது.
விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்னும் 3 நாட்களில் அதாவது ஆக. 22ம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறார். இதில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 300 நிர்வாகிகள் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி படம் எது: அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் செப். மாதம் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து அவர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் நடித்த முடித்தவுடன் சினிமாவில் இருந்து விலகி விஜய் முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications