அந்தரத்தில் ’துணிவு’! நல்ல படத்துக்கு விளம்பரம் எதுக்கு? சுரேஷ் சந்திராவை பொளக்கும் நெட்டிசன்கள்!
சென்னை : ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் துணிவு படத்திற்காக நடுவானில் செய்த ப்ரோமோஷன் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அவரை எதுக்கு கிண்டல் பண்ணனும்னு உங்களுக்கு தோன்றுகிறதா அதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
நடிகர் அஜித் நடித்த திரைப்படம் துணிவு படமும் , நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது. தற்போதே இரு பெரும் நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நாயகர்களை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
துணிவு இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 3 வது படமாகும் இதே கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

துணிவு
போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தில் நடிகர் ஏகேவுடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள நிலையில், இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் இப்படம் வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் மோத இருப்பதால் தற்போதிருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பலத்த வரவேற்பு
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா பாடல்களும் வெளியாக பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மில்லியன் கணக்கில் பார்த்துள்ள நிலையில் படத்தின் மூன்றாவது சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். அவ்வப்போது படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

மாஸ் ப்ரோமோஷன்
இந்நிலையில் படத்துக்கான புரமோஷன் வேலைகளை அந்த படத்தில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா பிரம்மாண்டமாக செய்து வருகிறது. அந்த வகையில் துபாயில் ஸ்கை டைவிங் குழு ஒன்று வாரிசு படத்தின் டீசர் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகிறது என்பதை குறிப்பிடும் வகையில் படத்தின் பேனருடன் ஸ்கை டைவிங் செய்த காட்சிகளை அந்நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. 'தரையில் நடந்து வர நாங்கள் வாரிசு இல்லை துணிவாக பரந்து வரும் துணிவு' என ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர்.

சுரேஷ் சந்திரா
இந்த நிலையில் நேற்று வரை வாரிசு படத்தை ட்ரோல் செய்த அஜித் ரசிகர்களை சும்மா விடுவார்களா விஜய் ரசிகர்கள் படத்துக்கு பிரமோஷன் தேவையில்லை என கூறிவிட்டு இப்போது வானில் பறந்து விளம்பரம் எதற்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவை வம்புக்கு இழுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.இந்த விவகாரத்தில் சுரேஷ் சந்திராவை இழுக்க வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

விளம்பரம் எதுக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருப்பதாக வதந்திகள் கிளம்பின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு இருந்த சுரேஷ் சந்திரா,"நல்ல படத்துக்கு ப்ரமோஷன் தேவையில்லை. நல்ல படம் என்றால் அதுவாகவே பிரமோஷன் செய்து கொள்ளும்" எனக் கூறியிருந்தார். தற்போது இந்த பதிவை தேடி கண்டுபிடித்து கிண்டல் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications