அவ்ளோ பெரிய ஆளா நீங்க! நித்திக்கே டஃப் கொடுக்கும் ’சூப்பர் மாடல்’ மீரா மிதுன்! எங்க தான் இருக்காங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை : பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்க லுக்-அவுட் கொடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், நித்யானந்தாவுக்கே டஃப் கொடுக்கும் மீரா மிதுன் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து விளம்பர வெளிச்சத்திற்காக விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் சில நடிகைகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

 சர்ச்சை மீரா

சர்ச்சை மீரா

மீரா மிதுனின் இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 அதிரடி கைது

அதிரடி கைது

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

 கைது வாரண்ட்

கைது வாரண்ட்

பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கைது செய்ய முடியவில்லை

கைது செய்ய முடியவில்லை

ஆனால் இதுவரை மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இருமுறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவான நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நித்யானந்தா

நித்யானந்தா

அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவரது தாயாரும் மனு அளித்துள்ள நிலையில், நித்யானந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மீரா மிதுன் இருப்பதாகவும், ஒருவேளை அவருடன் இருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருபுறம் லுக் அவுட் நடவடிக்கையோடு, கைது நடவடிக்கையையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+