ஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்த நாள் திமுக தொண்டர்களின் திருவிழா. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பல இடங்களில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் #HBDKalaignar96 ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகியுள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில..

பலருக்கு இன்றும் அருமருந்து

திறன் பட ஆயிரம் கலைஞர்கள் இருந்தாலும் "கலைஞர்" என்ற ஒரு சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும்.
அவரது அறிவில் செதுக்கிய பராசக்தி போன்றதொரு காவியம் தமிழை நேசிக்கும் பலருக்கு இன்றும் அருமருந்து.
மாபெரும் ஆளுமையின் பிறந்தநாள் இன்று

இன்னுமோர் நூற்றாண்டு

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இனிய 96வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னுமோர் நூற்றாண்டும் தமிழகத்தின் வரலாறு உம்மோடு பயணிக்கட்டும்! எம்மை வழிநடத்தி இன்றுபோல் என்றும் வாழ்க என்று வணங்குகிறோம்!

அஞ்சுகம் மைந்தன்..

கலைஞர் சாத்தியமற்றது.. வாழ்க்கை நம்ப முடியாதது.. அஞ்சுகம் மைந்தன் 96-ஆம் ஆண்டு அகவையில்
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், முத்தமிழ் அறிஞர் ஐயா டாக்டர் #கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!

சூரியன் என்றும் மறையாது

சூரியன் என்றுமே மறையாது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா...

மனம் கவர்ந்த ஆளுமை

அரசியலுக்கு அப்பாற்பட்ட மனம் கவர்ந்த ஆளுமையின் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைஞர் மு. கருணாநிதி பிறந்த தினம் இன்று.. ஜூன் 3

கலைஞர் அலை ஒருபோதும் ஓயாது

கடல் அலை ஓய்ந்தாலும் டாக்டர் கலைஞர் அலை ஒருபோதும் ஓயாது 96ல் பிறந்தநாள் காணும்
டாக்டர் கலைஞர் அவர்கள்
வாழ்க வாழ்க ...

சொல்வன்மை நாயகன்

இராமனை அவமதித்த கருணாநிதியின் தலையை சீவி, கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி பரிசு வழங்கப்படும்! - ராம்விலாஸ் வேதாந்தி.
நானே எனது தலையை சீவி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது!- கலைஞர்.
'சொல்வன்மை' நாயகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழன்னையின் தலைமகன்

நாளைய தலைமுறையும் வியக்கும், உயிரோடு கலந்த தலைவர், தமிழன்னையின் தலைமகன் கலைஞர் பிறந்தநாள்

முத்தமிழுக்கு பிறந்தநாள்

கலைஞர் வாழும் வரை திராவிடம் வாழும்..
திராவிடம் இருக்கும் வரை கலைஞரும் இருப்பார்..
முத்தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஓய்வறியா சூரியன் உதயமான தினம்..

ஓய்வறியா சூரியன் உதயமான தினம்..
தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம்..
கருணாநிதியின் 96 வது பிறந்தநாள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+