பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவரது பிரசார பாணி குறித்து சமூக வலைதளங்களில் புதிய விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக அவர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள், ஆந்திர அரசியல் தலைவர்களின் பாணியை ஒத்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்நாள் துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் அப்படி காப்பி எடுக்கிறார் என்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, நடிகர் விஜய் பொதுமக்களிடம் கவனம் ஈர்க்கும் விதமாக பல்வேறு முறைகளை தனது பிரசாரங்களின் போது பயன்படுத்தி வருகிறார். அவர் பொதுக்கூட்டங்களுக்கு வரும் போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, மக்கள் மத்தியில் நேரடியாக கலப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த செயல்கள் அவரது ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், எதிர்ப்பாளர்கள் மற்றும் சில நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பிரசார நிகழ்ச்சியில், விஜய்க்கு ஆதரவாளர்கள் வில் மற்றும் அம்பு வழங்கினர்.

தவெக விஜய்
அதை வைத்துப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபோன்ற காட்சிகள் ஏற்கனவே ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண் தனது தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தியதாக சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அதேபோல், பிரசாரத்தின் போது வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டுவது, பொதுமக்கள் மத்தியில் குழந்தைகளை தூக்கி வைத்து புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களும் முன்னதாக பவன் கல்யாண் மேற்கொண்டவை என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பவன் கல்யாண்
இதனை அடிப்படையாகக் கொண்டு, விஜய் அவரின் பாணியைப் பின்பற்றுகிறாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதற்கிடையில், சில நெட்டிசன்கள் மற்றொரு ஆந்திர தலைவரான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பாணியுடனும் விஜயின் செயல்களை ஒப்பிட்டு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக உடை தேர்வு முதல் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் விதம் வரை சில ஒற்றுமைகள் இருப்பதாக கூறி வருகின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டி
மேலும், விஜய் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக செல்ல முடியாத சூழலில், அவரது உருவ பொம்மைகள் அல்லது தொழில்நுட்ப உதவியுடன் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற முயற்சிகளும் பிற மாநில அரசியல் கட்சிகளில் முன்பே பயன்படுத்தப்பட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதள விமர்சனம்
ஆனால், அரசியல் வட்டாரங்களில் சிலர் இந்த விமர்சனங்களை இயல்பான அரசியல் விவாதங்களாகவே பார்க்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் காலங்களில் தலைவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து ஒப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள் எழுவது சாதாரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்குதான் விஜய்க்கு உண்மையான சிக்கலே எழுகிறது.
தமிழ்நாடு அரசியல்
காரணம், விஜய் ராம்ப்வாக் சென்றதை முதல்வர் காப்பி அடிக்கிறார், ரோட் ஷோ சென்றதால் துணை முதல்வர் காப்பியடிக்கிறார் என தமிழக வெற்றி கழகத்தினர் பிற சீனியர் தலைவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வுகளையும் கவனிக்கும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் தொண்டர்கள் தற்போது விஜய்யை அடி அடியென அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்!












Click it and Unblock the Notifications