மாஸ்டர் நியாபகம் இருக்கா? நெருக்கும் ரெய்டு.. ஸ்டாலின் மட்டும் "விஜய்" ஸ்டைலில் இறங்கினா.. மாஸ்தான்!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான வீடுகளில் ஐடி ரெய்டு நடக்கும் நிலையில்.. இணையத்தில் திமுகவினர் கொதித்து போய் உள்ளனர். திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகம் இது என்று புகார் வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.சபரீசனுக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 2 மணிநேரமாக தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. நேற்று இரவுதான் ஸ்டாலின் கொளத்தூரில் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் ரெய்டு நடக்கிறது.

கண்டனம்
இந்த நிலையில் ஸ்டாலினின் மருமகன் வீட்டிலேயே நடக்கும் இந்த ஐடி ரெய்டுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் திமுகவை மிரட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி சோதனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் திமுக இதற்கெல்லாம் அடிபணியாது. திமுக இதுபோன்ற அதிகாரத்தை கண்டு அஞ்சாது என்று திமுகவினர் பலர் இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

திமுக
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் இந்த ரெய்டுக்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் தலைவர்களும் இந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், இது போன்ற ரெய்டு மூலம் எங்களை ஒடுக்க முடியாது.

எதிர்ப்பு
பொதுவாக தேர்தல் நேரத்தில் ரெய்டு நடந்தால் அனுதாபம்தான் கிடைக்கும். இது பாஜகவிற்குதான் எதிராக மாறும். ரெய்டு ஒருவகையில் ஸ்டாலினுக்குதான் அனுதாப அலையை ஏற்படுத்தும். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. தேர்தல் நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள் என்று திமுகவினர் நம்பிக்கையாக பேசுகிறார்கள்.

ஸ்டாலின்
விஜய் மாதிரி ஸ்டாலினுக்கும் இந்த ரெய்டு சாதகமாகவே செல்ல போகிறது. ஸ்டாலினும் இன்று பிரச்சாரத்தில் விஜய் ஸ்டைலில் ரெய்டுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். விஜய் எடுத்த செல்பி புகைப்படங்களும் மீண்டும் இணையத்தில் இதனால் பகிரப்பட்டு வருகிறது.
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications