"பளபள" நடிகைகள் போட்டோஸ்! நாங்க உங்க அடிமை! பேஸ்புக்கில் நெட்டிசன்கள் பரபர டிரெண்ட்.. ஐயோ என்ன இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக்கில் நெட்டிசன்கள் இடையே புதிதாக அடிமை கலாச்சாரம் ஒன்று உருவெடுத்து உள்ளது. அட இது நீங்கள் நினைக்கிற மாதிரி பண்டைய கால அடிமை கலாச்சாரம் இல்லை.. இது கொஞ்சம் வேற மாதிரி ரகம்!

பேஸ்புக்கில் அவ்வப்போது ஒவ்வொரு டிரெண்டு தோன்றி மறைவது வழக்கம். இந்த வருட தொடக்கத்தில்தான் vibe கலாச்சாரம் என்ற டிரெண்ட் இருந்தது.

அதாவது எல்லா வீடியோவிற்கும் பின்பும் ஏதாவது பாடலை ஓடவிட்டு வைப் செய்யும் கலாச்சாரம் அது. வந்த வேகத்தில் பல நெட்டிசன்களை கவர்ந்த இந்த கலாச்சாரம் வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது.

பேஸ்புக்

பேஸ்புக்

இந்த நிலையில்தான் தற்போது பேஸ்புக்கில் புதிதாக இன்னொரு கலாச்சாரம் தோன்றி உள்ளது. அந்த டிரெண்ட் அடிமை கலாச்சாரம். வலிமை படம் பார்த்திருப்பவர்களுக்கு தெரியும்.. அதில் வில்லனின் அடியாட்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்து நாங்கள் உங்கள் அடிமைகள், நாங்கள் சாத்தானின் அடிமைகள் என்று கூறுவதை பார்த்து இருப்பீர்கள். அப்படி நடிகைகளுக்கு அடிமைகளை உருவாக்குவதுதான் இந்த புது டிரெண்ட்.

 அடிமை பக்கங்கள்

அடிமை பக்கங்கள்

அதாவது ஒவ்வொரு நடிகைக்கு என்றும் slave பக்கங்களை நெட்டிசன்கள் கடந்த 3 நாட்களாக உருவாக்கி வருகிறார்கள். நயன்தாரா slaves, கீர்த்தி சுரேஷ் slaves, அனுஷ்கா slaves, திரிஷா slaves என்று வரிசையாக பல அடிமை பக்கங்களை உருவாக்கி அதில் நெட்டிசன்கள் பலர் வரிசையாக நடிகைகளின் புகைப்படங்களை மட்டுமே ஷேர் செய்யும் கொடுமையான கலாச்சாரம் உருவெடுத்து உள்ளது.

பேன் பேஜ்

பேன் பேஜ்

நடிகைகளுக்கு ஃபேன் பேஜ் இருப்பது சகஜம் தானே இதில் என்ன என்று கேட்கலாம். ஆனால் இவை ஃபேன் பேஜ் கிடையாது. அதில் இருப்பது போலவே பக்கா அடிமைகளின் பக்கங்கள் இவை. அதாவது அந்த நடிகைக்கு நான் அடிமை ஆக வேண்டும் என்பது தொடங்கி பல மோசமான கமெண்டுகளை பொதுவில் வெளியிடும் கலாச்சாரமாக இது உருவெடுத்துள்ளது.

இளைஞர்கள்

இளைஞர்கள்

முதலில் ஒரு சில இளைஞர்கள் மத்தியில் மட்டும் பரவிய இந்த slave கலாச்சாரம் தற்போது பல நெட்டிசன்களை நோக்கி சென்றுள்ளது. அதிலும் முன்பு நடிகைகளுக்கு மட்டுமே slave பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஆபாச படங்கள் பகிரப்பட்டது. தற்போது இது டிக்டாக் பிரபலங்கள். செய்தி வாசிக்கும் பெண் செய்தியாளர்கள், இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் பெண்கள் என்று பலர் வரை இது நீண்டு இருக்கிறது.

எல்லை மீறும் நெட்டிசன்கள்

எல்லை மீறும் நெட்டிசன்கள்

அதிலும் சில இடங்களில் எல்லை மீறும் நெட்டிசன்கள்.. வயது நிரம்பாத ஒரு பிரபல டிக்டாக் சிறுமிக்கு கூட இது போன்ற அடிமை சாசன பக்கங்கள் உருவாக்கும் அளவிற்கு நிலைமை கைமீறியது. அதிலும் இதில் பல இடங்களில் போட்டோக்களுக்கு மேலே வக்கிரமான கமெண்ட்கள் போடப்படுவதும் சர்ச்சையாகி உள்ளது. பேஸ்புக்கில் பல பாலியல் ரீதியான தவறான பக்கங்கள் இருந்தாலும்.. இந்த குறிப்பிட்ட அடிமை பக்கங்கள், நெட்டிசன்கள் பலர் பயன்படுத்தும் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளதுதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+