ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து.. என்னங்க இதெல்லாம்? விஜய்யை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!
சென்னை: "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" எனக் கூறி நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஏன் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. அதில் கட்சி கொடியையும், கட்சிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்தது.
விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார் விஜய். இதற்கு இடையே சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.
விஜய் நடிப்பில் அண்மையில் 'The GOAT' படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் குறித்த அறிவிப்பும் நேற்று வெளியானது. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இந்தப் படம் 2025 அக்டோபரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பண்டிகைகள் வந்தால் அதற்கு வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிடும் விஜய், அண்மையில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், இன்று மலையாளிகளின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்!' என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். இதனை மலையாள மொழியிலும் பதிவிட்டுள்ளார் விஜய்.
நடிகர் விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படங்களுக்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பது வழக்கம். தமிழ்நாடு போலவே, கேரளாவிலும் விஜய் படங்களுக்கு ஓபனிங் வசூல் அள்ளும். இந்நிலையில் தான் ஓணம் பண்டிகையையொட்டி மலையாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.
இந்நிலையில், கேரளாவின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் விஜய், தமிழகத்தில் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? குறிப்பாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து வரவில்லை. இனிவரும் காலங்களிலாவது அனைத்துதரப்பு மக்களின் விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றிற்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
மற்ற மதத்தினருக்கும் மற்றும் மாநிலத்திற்கும் வாழ்த்து சொல்வதை பெருமையாக நினைக்கும் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதை அவமானமாக நினைக்கிறார் எனவும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஓணம் பண்டிகைக்கு விஜய் சொன்ன வாழ்த்தால் சமூக வலைதளமே ரணகளமாகிக் கிடக்கிறது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா











Click it and Unblock the Notifications