நெட்பிளிக்ஸில் கல்யாண வீடியோ.. நயன்தாரா விளம்பரத்திற்காக இப்படி செய்தாரா? நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: ஒரு வழியாக நயன்தாரா தனது கல்யாண வீடியோவை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்துவிட்டார்.. இதற்கு பின்னால் அவர் ஒரு புரோமோசன் டிரிக்ஸ் பயன்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.. தனுஷை திட்டியதும், 3 செகண்ட் வீடியோவிற்காக மிகப்பெரிய அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில் ஒரு விளம்பர டிரிக்ஸ் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.. கல்யாண வீடியோவை ஓட வைக்க இப்படி செயல்பட்டதாக கூறுகிறார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திருப்பூர் பசங்கடா என்ற பெயரில் உள்ள நெட்டிசன் ஒருவர் வீடியோவில் கூறுகையில், ஒரு வழியாக நயன்தாரா தனது கல்யாண வீடியோவை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்துவிட்டார்.. இதற்கு பின்னால் அவர் ஒரு புரோமோசன் டிரிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. நயன்தாரா நினைத்திருந்தால், அந்த 3 செகண்ட் வீடியோவை நீக்கிவிட்டு கூட பயன்படுத்தியிருக்க முடியும்.. ஆனால் அவர் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து அடுத்த லெவலுக்கு போய்விட்டார்..

இனிமேல் இந்த கண்டென்ட்டை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தால் ஒன்றுமே கிடையாது.. அதனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் தூக்கி போடுவோம்.. போட்டால் அது பரபரவென பற்றிக் கொள்ளும்.. கடந்த இரண்டு நாட்களாக இதுபற்றி சமூக வலைதளங்களில் பேசினார்கள்.. எனவே இதுபோன்ற புரோமோசன் டிரிக்ஸை பயன்படுத்தி வீடியோவை போட்டுவிட்டு, பின்னர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் அல்லது நீக்கி கொள்ளலாம் என நினைத்து எளிதாக போஸ்ட் செய்துவிட்டார்கள்.. இதுதான் இதற்கு பின்னால் உள்ள புரோமோசன் டிரிக்ஸ் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "தனுஷ் நயன்தாரா விவகாரம் எல்லாம் ஒரு நாடகமே.. அவங்க வெட்டிங் வீடியோ ப்ரொமோஷனுக்காக இதை பயன்படுத்துறாங்க.. நாம் தான் நயன்தாரா என்று ஒரு பக்கமும் தனுஷ் இன்னொரு பக்கமும் பேசிகிட்டு இருக்கோம்" என்று கூறியுள்ளார்.

மூன்றாவதாக ஒரு நெட்டிசன் கூறும் போது, நயன்தாரா & விக்னேஷ் சிவன் நெட்ஃபிக்ஸில் அவர்களின் திருமண ஆல்பம் வெளியீடு குறித்து விவாதத்தை உருவாக்கி, இந்த எதிர்மறை விளம்பர யுக்தி தேவையற்ற நாடகம். இந்த சர்ச்சை உண்டாக்கும் யுக்தி, அவர்களின் நம்பகத்தன்மையைப் பற்றிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

நயன்தாரா நெட்ப்ளிக்ஸ் ரிலீஸ்க்கு ரெண்டு நாள் முன்னால பஞ்சாயத்து இழுத்து பப்ளிசிட்டி தேடிவிட்டார் என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார். இப்படி பல்வேறு நெட்டிசன்கள் நயன்தாரா விளம்பரத்திற்காக செய்ததாக குற்றம்சாட்டுகிறார்கள். எனினும் தனுஷை அவர் கடுமையாக விமர்சித்து பேசியதன் பின்னணியில் வெறும் விளம்பர யுக்தியாக மட்டுமே பார்க்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தனுஷ் நேரடியாக விளக்கத்தை சொல்லாதவரை என்ன நடந்தது என்பதை அறிய முடியாது என்றும் சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications