Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓலா, உபர், ரேபிடோ, ரெட் டாக்ஸி ஆப்களில்.. ஆட்டோ புக்கிங்.. நெட்டிசன்கள் சொன்ன பெரிய பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓலா, உபேர்,ரேபிடோ, ரெட் டாக்ஸி என பல்வேறு நிறுவனங்கள் ஆட்டோ புக்கிங் செய்ய தங்கள் ஆப்களில் வசதிகளை செய்திருக்கின்றன. ஆனால் எல்லா ஆப்களிலும் ஒரு சிக்கலை பார்த்திருப்பீர்கள். எப்படி என்றால், பீக் அவர்ஸ் அல்லது மழை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஆட்டோவை ஆப்களில் புக்கிங் செய்வீர்கள்.. ஆனால் எந்த டிரைவரும் எடுக்க மாட்டார்கள்.. கூடுதலாக 50 ரூபாய் போட்ட பின்னரும், யாரும் எடுக்க மாட்டார்கள். இறுதியாக இன்னொரு 50 கூடுதலா வந்த பின்னர், சிலர் எடுப்பார்கள்.. கால் பண்ணும் போதே கூடுதலாக 50 வேண்டும் என்று கேட்பார்கள். ஓகே சென்னால் தான் ஆட்டோ வரும் என்று நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

பைக் டாக்ஸி காரணமாக பல ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் போன்ற பெரிய நகரங்களில் பைக் டாக்ஸி அதிக அளவில் ஓடுகிறது. இந்த நகரங்களில் ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் பலர் சரியான வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள்.

Netizens have raised major issues regarding auto booking on Ola Uber Rapido Red Taxi apps

இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

ஆனால் பைக் டாக்ஸிக்கு எதிரான ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த போராட்டம் குறித்த செய்திக்கு கீழ் கமெண்டுகளை பார்த்தால், பலர் ஆட்டோ ஓட்டுநர்களின் செயல்களை பட்டியலிட்டதுடன், பைக் டாக்ஸியை ஏன் தடை செய்யக்கூடாது என்று கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பலர் வைக்கும் குற்றச்சாட்டு, மற்ற மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டரில் என்ன வருகிறதோ அதனை தான் வாங்குகிறார்கள். அவர்களுக்கு கட்டுப்படி ஆகும் போது, ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஆட்டோ கட்டணம் நியாயமாக வசூலிக்கப்படுவது இல்லை என்பது தான்...

ஆட்டோ ஓட்டுநர்களின் செயல்கள் குறித்து நெட்டிசன்கள் கூறிய சில கருத்துக்களை பார்ப்போம். ஓலா, உபர்,ரேபிடோ, ரெட் டாக்ஸி என பல்வேறு நிறுவனங்கள் ஆட்டோ புக்கிங் செய்ய தங்கள் ஆப்களில் வசதிகளை செய்திருக்கின்றன. ஆனால் எல்லா ஆப்களிலும் ஒரு சிக்கலை பார்த்திருப்பீர்கள். எப்படி என்றால், பீக் அவர்ஸ் அல்லது மழை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஆட்டோவை ஆப்களில் புக்கிங் செய்வீர்கள்..

ஆனால் எந்த டிரைவரும் எடுக்க மாட்டார்கள்.. கூடுதலாக 50 ரூபாய் போட்ட பின்னரும், யாரும் எடுக்க மாட்டார்கள். இறுதியாக இன்னொரு 50 கூடுதலா வந்த பின்னர், சிலர் எடுப்பார்கள்.. கால் பண்ணும் போதே கூடுதலாக 50 வேண்டும் என்று கேட்பார்கள். அப்படி நீங்கள் பணம் கொடுக்க தயார் என்றால் மட்டுமே ஆட்டோ வரும்..இல்லாவிட்டால் கேன்சல் ஆகிக்கொண்டே இருக்கும் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் கூறுகையில், ஆபிஸ் போகும் போது 3கிமீக்கு ஆட்டோ எடுக்கலாம் என்று பார்த்தால் 400 கேக்கறீங்க..இப்படி பண்ணா எப்படி ஆட்டோ எடுக்க தோணும்...? அதுக்கப்புறம் ரேபிடோதான் எப்பவுமே.. பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப ரேபிடோ மேல பழி போடலாமா?" என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஒரு நெட்டிசன், மீட்டர் போட்டு நியாயமா ஓட்டுங்க. உங்கள தேடி வருவாங்க.
0.5KM க்கு ₹100 வாங்கினா எவன் வருவான்?' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையைச் சேர்ந்த நெட்டிசன் கூறுகையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்ல இருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் 800மீட்டர் தான் இருக்கும், 100to120 கேக்குறீங்க பா....இதனால தான் மாற்றுவழிகளை தேடுறோம் கொஞ்சம் நியாயமா நடந்துக்க பாருங்க நாங்களும் மாறிவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

Netizens have raised major issues regarding auto booking on Ola Uber Rapido Red Taxi apps

இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "ஓலா ஆப்பில் ஆட்டோ புக் செய்தேன் 7 கிமீ 300 ரூபாய் வந்தது. சரி என்று ஒரு 20 ரூபாய் டிப்ஸ் போட்டு வருவான் என்று காத்திருந்தேன். டிரைவர் போன் பண்ணி 400 ரூபாய் கொடுங்கள் என்றான். நான் மறுக்கவே என்னை கேன்சல் செய்ய சொன்னார். பயங்கர பிராடுத்தனம் இது" என்று கூறினார்.

Netizens have raised major issues regarding auto booking on Ola Uber Rapido Red Taxi apps

"ராபிடோ ஓட்டுற முக்கால்வாசி நபர்கள் வேலை இல்லாம .. உங்கள மாதிரியே வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடுறவங்காதன்... இன்னும் சொல்ல போனா அவன்தான் உங்களைவிட வாழ்வாதாரத்துக்காக போராடுறான். புறக்கணிக்கிறதா இருந்தா ola, uber, service ah மொத்தமா புறக்கணிங்க... அது என்ன பைக் மட்டும்?" என்று நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

Netizens have raised major issues regarding auto booking on Ola Uber Rapido Red Taxi apps

போரூர் டோல் கேட் - இராமபுரம் சிக்னல் (மியாட் அருகேன்னு சொல்லலாம், எம்ஜியார் தோட்டம் அருகே என்று சொல்லலாம் ) இந்த தூரத்திற்கு ஒரு ஆட்டோகாரர் 400 ஓவா கேட்கிறார். இப்போ சொல்லுங்க நாங்க என்ன பண்ணட்டும்?" என்று நெட்டிசன் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர்களை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

Netizens have raised major issues regarding auto booking on Ola Uber Rapido Red Taxi apps

சென்னையில் தற்போது எல்லோரும் CNG தான் பயன்படுத்துறாங்க. இது பெட்ரோலை விட விலை 10 குறைவு, 10 கிமீ அதிகமாக கொடுக்கும். பெட்ரோல் 25 - 30 CNG 30-40. 2 கிமீ போனாலே அவங்க 1 லிட்டர் பணத்தை எடுத்துடுறாங்க. 200 / 300 ன்னு சாதாரணமாக கேட்குறாங்க. என்று நெட்டிசன் ஒருவர் ஆதங்கத்தை கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+