பைக்கில் நடுரோட்டில் காதலன் செய்த காரியம்! பொது இடத்தில் இப்படி செய்யலாமா! கொந்தளித்த நெட்டிசன்கள்
சென்னை: பொது இடத்தில் காதலிக்கிறோம் என அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு பரபர வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் இன்னுமே காதல் திருமணங்கள் என்பது இயல்பானதாக மாறவில்லை. பத்திரிக்கைகளில் வரும் திருமண விளம்பரங்களும், நாட்டில் நடக்கும் ஆணவக் கொலைகளும் இதற்குச் சாட்சியாகும்.

சமீபத்தில் கூட தமிழ்நாட்டையே உலுக்கும் வகையிலான ஒரு ஆணவக் கொலை அரங்கேறியது. இந்த விவகாரத்தில் பெற்ற மகனையே தந்தை கொடூரமாக வெட்டி சாய்த்தார். தடுக்க வந்த பாட்டியையும் வெட்டினார்.
காதல்: இதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் போக்கும் அதிகரித்தே வருகிறது. அதேநேரம் காதலிக்கும் ஜோடிகள் பொது இடங்களில் செய்யும் காரியங்கள் சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் இளம் ஜோடி பொது இடம் எனக் கூட பார்க்காமல் படுத்துக் கொண்டு முத்தமிட்ட வீடியோ பரபரப்பைக் கிளப்பியது.
இதனிடையே இப்போது இணையத்தில் மற்றொரு வீடியோ டிரெண்டாகி வருகிறது. நடுரோட்டில் இளம் பெண் ஒருவரிடம் இளைஞர் காதலை வெளிப்படுத்தும் இந்த வீடியோ பெரும் விவாகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவில், இளம் காதல் ஜோடி ஒன்று ஒரே பாக்கில் ஒன்றாகப் பயணித்து வருகிறார்கள். அப்போது சில இளைஞர்கள் வரிசையாக அவர்களைத் தாண்டி செல்கிறார்கள். அவர்கள் வரிசையாக அந்த ஜோடியை தாண்டி செல்கிறார்கள்.
வரிசையில் டீ சார்ட்: அவர்கள் ஒவ்வொருவரின் டீ சர்டிலும் ஒவ்வொரு எழுத்துகள் இருக்கிறது. இந்த இளம் ஜோடி செல்லும் பைக்கிற்கு முன்னால், அவர்கள் செல்லவே, அது "ஐ லவ் யூ" என்று வருகிறது. மேலும், பின்னால் மற்றொரு பைக்கில் வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணிடம பூங்கொத்தைத் தருகிறார். அப்போது தான் அந்த பெண்ணுக்கு என்ன நடக்கிறது என்றே புரிகிறது. பின்னர்,
அனைவரும் பைக்கை ஓரமாக நிறுத்த. பூங்கொத்தைக் கொடுத்து அந்த இளைஞர் பிரபோஸ் செய்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு தரப்பினர் இந்த ஜோடியை பாராட்டி வருகின்றனர். எவ்வளவு அழகாகக் காதலை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் இவர்களைச் சாடியும் வருகின்றனர். காதலை வெளிப்படுத்துவது எல்லாம் நல்லது தான், ஆனால் அதை பொது இடத்தில் ஆபத்தான முறையில் இப்படிதான் செய்ய வேண்டுமா என விமர்சித்து வருகின்றனர். மேலும், அவர்கள் யாரும் ஹெல்மெட் போடாமல் இருப்பதையும் பலரும் சாடி வருகின்றனர்.
ஆபத்து: இது குறித்து ஒருவர் தனது ட்விட்டரில், "வெளிநாட்டுக்காரனை பாத்து இதெல்லாம் ஒகே .. ஆனா ஒருத்தன் கூட ஹெல்மெட் போடல .. அதுவும் ஹைவேஸ்ல .. மத்தவங்க உயிருக்கும் ரிஸ்க் . தமிழ்நாடு போலீஸ் இந்த மாதிரி பொது இடத்துலே ஆபத்தா வீடியோ பண்றவங்களை புடிச்சு தண்டிக்கலானா இது ஒருநாள் விபரீதமாகும்" என்று சாடியுள்ளனர். அதேநேரம் இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
இதுபோல பொது இடங்களில் விதிமுறைகளை மீறுவோரை ஆதரிக்கக் கூடாது என்றே பலரும் சாடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications