ஒரே டியூன்.. 'மாதிரி எல்லாம் இல்ல, ஒரே பாட்டு தான்'.. அனிருத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: ஒரே டியூனில் இசையமைப்பாளர் அனிருத் பல பாடல்களுக்கு இசையமைத்திருப்பதாக குற்றம்சாட்டி நெட்டிசன்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். முன்பெல்லாம் பாடல்கள் வெளியானால், அந்த பாடலை ரசிப்பதில் தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இப்போது அந்த பாடல் எந்த பாடலின் சாயலில் உள்ளது என்பதை கண்டுபிடித்து வெளியிடுகிறார்கள். அப்படி தான் நெட்டிசன்கள் வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் படம் எடுப்பவர்கள் படம் வெளிவந்த பின்னர், அதற்கு வரும் எதிர்மறை தாக்குதலை தடுக்கவே தற்போது பெரிய அளவில் போராட வேண்டியதிருக்கிறது.. பல கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட படங்களை வேண்டுமென்ன கலாய்த்து ஓடவிடாமல் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கிறார்கள்..

இதனால் படம் நன்றாக இல்லாமல் இருக்கிறதோ என்று நினைத்து படத்திற்கு போவதையே பலர் நிறுத்தி விடுகிறார்கள். மேலும் பிரபல நடிகர்கள் மீது கோபம் இருந்தாலோ அல்லது பிரபல இயக்குனர்கள் மீது கோபம் இருந்தாலோ அதனை காட்டும் வகையில் அவரது படங்களையும் ஓடவிடாமல் செய்ய என்னெவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் இங்கு சிலர் செய்கிறார்கள்..
இந்த சிக்கல்கள் ஒருபுறம் எனில் கதை திருட்டு சர்ச்சையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான தி கோட் திரைப்படம், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜதுரை படத்தோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். இந்த பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை.. அதற்குள் அடுத்த பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு ஆரம்பித்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வேட்டையன் படத்தில் அனிருத் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி உள்ளன. அதில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் நடிப்பில் மனசிலாயோ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ஏற்கனவே அனிருத் இசையமைத்த பாடல்களை போன்றே இருப்பதாக விமர்சித்துள்ளார்கள் நெட்டிசன்கள். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் வரும் போதே தெரியனும் வர்ற சிங்கம் யாரு என்ற பாடலை போல், வேட்டையன் படத்தில் வரும் மனசிலாயோ பாடல் உள்ளதாக விமர்சித்துள்ளார்கள்.
இதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் வரும் ஜலபுலஜங் பாடலை போலவே, மனசிலாயோ பாடல் உள்ளதாக கூறியுள்ளார்கள்.ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் உள்ள சும்மா கிளி பாடலும் இதே டோனில் உள்ளதாக கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக மனசிலாயோ, வரும் போதே தெரியனும், ஜலபுலஜங், சும்மா கிழி என நான்கு பாடலும் ஒரே டோனில் இருப்பதாக விமர்சித்து நெட்டிசன்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications