நிர்மலா சீதாராமன் கொடுத்த ஒரு பேட்டி.. இணையம் முழுக்க டிரெண்ட்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
சென்னை: ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. இணையம் முழுக்க பலர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. அசோக் லேலாண்ட், மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டது ஏன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அவரின் பேட்டி பெரிய சர்ச்சை ஆகியுள்ளது.

இதுதான் காரணம்
தற்போதைய இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வாகனம் வாங்கும் ஆசை குறைந்துள்ளது . பொதுவாக இளைஞர்கள் இப்போது இஎம்ஐ கட்ட விரும்புவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் ஓலா, உபரில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பலர் தற்போது மெட்ரோவை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதுதான் சரிவிற்கு காரணம் என்று இவர் கூறியுள்ளார்.

வைரல்
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் கருத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். என்ன நிர்மலா சீதாராமன் இப்படி எல்லாம் பேசுகிறார். அவருக்கு பொருளாதாரம் குறித்து தெரியுமா, என்று கேள்வி கேட்டு கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
|
ஏன் கீழ்
ஆகவே மக்களே பொருளாதாரம் ஏன் கீழே போகுது தெரியுமா? பண மதிப்பு ஏன் கீழ போகுது தெரியுமா?... புவி ஈர்ப்பு விசையால்தான், என்று இவர் கூறியுள்ளார்.
|
இப்படித்தான்
நிர்மலா சீதாராமன் இப்படித்தான் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்திக் கொண்டு இருக்கிறார்.
|
வாய்ப்பு
ஓலா, உபர் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை வைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டோம் என்று கணக்கு காட்டுவீர்கள். தற்போது அதே ஓலா, உபரை ஆட்டோமொபைல் சரிவிற்கு காரணமாக கூறுவீர்களா? என்று இவர் கேட்டுள்ளார்.
|
நேரு இல்லை
நல்லவேளை இந்த பிரச்சனைக்கு இவர்கள் நேருவை காரணமாக சொல்லவில்லை, என்று இவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications