"தமிழகமா.. தழிழகமா" அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு! விஜய் மாநாட்டில் பிழை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சி பெயரை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்ட நிலையில், அந்த வீடியோவில் தமிழகம் என்ற சொல்லிலேயே எழுத்துப்பிழை இருப்பதாக நெட்டிசன்கள் சாடி வருகிறார்கள். இது தொடர்பான போட்டோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். அந்தக் கட்சியின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

விஜய் அதிரடி: இதில் மாநிலம் முழுக்க இருந்து விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இறுதியில் பேசிய விஜய் பல அதிரடி கருத்துகளைத் தெரிவித்தார். பல அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சித்தார். கடைசியாகக் கூட்டாட்சி குறித்தும் மிக முக்கிய கருத்தைத் தெரிவித்தார். இவை அனைத்தும் இணையத்தில் பேசு பொருள் ஆனது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் மாநாட்டில் தமிழகம் என்ற பெயரிலேயே தவறு இருந்ததாக நெட்டிசன்கள் சாடி வருகிறார்கள்
அதாவது கட்சிக் கொடி வெளியீட்டு விழாவின் போதே கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கான விளக்கத்தை மாநாட்டில் அளிக்கப் போவதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே மாநாட்டில் இறுதியில் இந்த இரண்டிற்குமான விளக்கம் தரப்பட்டது. அதில் கட்சியின் விளக்கத்தில் ஒரு இடத்தில் வரும் காட்சியே இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
கட்சி பெயர் விளக்கம்: அந்த வீடியோவில், கட்சிக்கு நேர்மறை அர்த்தம். நேர்மறை அடையாளம் கொண்ட சொல் தேவை என்பதால் வெற்றி என்ற வார்த்தையை மைய சொல்லாகத் தேர்வு செய்ததாகக் குறிப்பிடப்பட்டது. மேலும், மக்களின் அடையாளம் அங்கீகாரத்தைக் குறிப்பிடும் சொல்லும் என்பதால் முதல் வார்த்தையாகத் தமிழகம் என்ற வார்த்தையைத் தேர்வு செய்ததாகக் குறிப்பிட்டார்கள்..
தமிழகம் என்றால் தமிழர்கள் வாழும் இடம் என்பதைக் குறிக்கும் இந்த சொல் பல இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சொல் என்றும் இதையே தான் அண்ணா தமிழ்நாடு என மாறினார் என்றும் கூறப்பட்டது. இதனால் முதல் வார்த்தை தமிழகம் என்பது தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கழகம் என்றால் படை பயிலும் இடம் என்றும் இளம் சிங்கங்கள் பயிலும் இடம் என்பதால் கழகம் என்பது கடைசி வார்த்தையாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதுவே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருக்குக் காரணம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

எழுத்துப்பிழை: இது தொடர்பான வீடியோ மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு விஜய் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அதில் தமிழகம் என்பதை விளக்கும் காட்சியில் ஒரு இடத்தில் தமிழகம் என்ற வார்த்தையை எழுதுவது போல இருக்கும். ஆனால், அதில் தமிழகம் என்பதற்குப் பதிலாக எழுத்துப்பிழையாக தழிழகம் என்று வருகிறது.. அதுவே இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.
நெட்டிசன்கள்: கட்சியின் பெயரை விளக்கும் வீடியோவில் அதுவும் தமிழகம் என்ற வார்த்தையிலேயே பிழை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அது தொடர்பான போட்டோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. எப்படியும் இந்த வீடியோவை பலர் சரி பார்த்து இருப்பார்கள்.. விஜய் கூட பல முறை பார்த்து இருப்பார். ஆனால், இது எப்படி யாருடைய கண்ணிலும் படாமல் போனது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications