இப்போ மன்னிப்பு கேட்கணுமா? வேண்டாமா? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு! விஜயை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: நேற்று விஜய் சார்பாக தமிழக வெற்றிக் கழகம் நடத்திய போராட்டத்தில் நடந்த சொதப்பல்களை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று விஜய் தனது பேச்சில், மடப்புரம் அஜித் குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். சாதாரண குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும். ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க - 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க. அஜித் குமார் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்தது போல இங்கேயும் கொடுங்கள். சாத்தான்குளம் மரணத்தை விமர்சனம் செய்தீர்களே.. இப்போது நீங்கள் செய்வது என்ன சார்?

அதே ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்து இருக்கும் சிபிஐ கிட்ட போய் ஏன் ஒளிஞ்சுக்கிட்டீங்க? ஏன் எஸ்ஐடி அமைக்கவில்லை?. ஒன்றிய அரசின் ஆட்சிக்கு பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள். உங்களை நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா நீங்க எதுக்கு சார்?. உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்?
உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள். நீங்கள் சாரி மட்டும்தான் சொல்ல முடியும்.. உங்களால் வேறு என்ன சொல்ல முடியும்.. உங்கள் ஆட்சி சாரி மாடல் ஆட்சியாக மாறிவிட்டது., என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.

மன்னிப்பு கேட்கணுமா வேண்டாமா?
நேற்று விஜய் முதல்வரை விமர்சனம் செய்தார். ஆனால் இரண்டரை நிமிடங்கள்தான் பேசினார். பெரிய திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிடவில்லை. சாரி கேட்பதை விமர்சனம் செய்யும் போர்டை கையில் வைத்துக்கொண்டு.. சாரி கேளுங்கள் என்று விஜயே பேசும் அளவிற்குத்தான் திட்டமிடல் இருந்தது. இதனால் இப்போ மன்னிப்பு கேட்கணுமா? வேண்டாமா? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு! என்ற அளவிற்கு நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
சரி இப்போ எதுக்கு ஆர்ப்பாட்டம்? ~ மன்னிப்பு வேண்டாம், நீதி வேணும்னு.. சரி, என்ன கேட்டுட்டு இருக்கே? ~ ஒரு குடும்பத்துக்கிட்ட மன்னிப்பு கேட்டா போதாது, 24 குடும்பத்து கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு..!!, சாரி வேண்டாம்னு போர்டு வச்சுக்கிட்டு மன்னிப்பு கேளுங்கன்னு பேசுனா பாத்தியா..!? அணில் நிலைமைய நினைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு.. என்று நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

திமுகவும் கிண்டல்
நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக போராட்டம் 2 விதமான விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த போராட்டம் மிகப்பெரிய திட்டத்துடன், எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தது. ஆனால் அதன்பின் நடந்ததுதான் பல விவாதங்களை எழுப்பி உள்ளது. ப்ரோ விஜய்.. 3 மணி நேரம் பேச அனுமதி வாங்கி 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா? என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேச்சை திமுக இளைஞரணி செயலாளர் ராஜிவ் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
ராஜிவ் காந்தி செய்துள்ள போஸ்டில், Sorry ப்ரோ விஜய்.. 3 மணி நேரம் பேச அனுமதி வாங்கி 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா? என்ன பண்ண...கேமரா, கேரவன், மேக்கப், சம்பளம் இல்லாம களத்துக்கு வந்தா அப்டித்தான் ப்ரோ ... வெயில் அடிக்கும் வேர்க்கும்... What Bro... That's wrong Bro, என்று கிண்டலாக போஸ்ட் செய்துள்ளார்.

-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா?












Click it and Unblock the Notifications