என்னாது.. இவ்வளவு ரூபாயா?.. இன்று முதல் கேபிள் டிவி கட்டணமும் உயர்கிறது.. எகிறும் மாதாந்திர பட்ஜெட்

இன்று முதல் கேபிள் டிவி கட்டணமும் உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்கிறது என்ற தகவல் நடுத்தர மக்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் டிவி சேனல்கள் என்பது தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது.. உள்ளூர் தொலைக்காட்சி முதல் சர்வதேச சேனல்கள் வரை நம்மால் எளிதாக பார்க்க முடியும்..

சிலர் தங்கள் வீடுகளில் நேரடி இணைப்பு "டிஷ்" இணைப்பு தந்திருந்தாலும், பெரும்பாலானோர் கேபிள் நிறுவனங்களைதான் விரும்புகின்றனர்.. அதைதான் பயன்படுத்தியும் வருகின்றனர்.

கட்டணங்கள்

கட்டணங்கள்

டிராய் எனப்படும் மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கேபிள் டிவி கட்டண விகிதத்தை நிர்ணயித்து வருகிறது.. அதை மாற்றி உயர்த்துவதும், ஒழுங்குப்படுத்துவம்கூட இந்த டிராய் நிறுவனம்தான்.. அதனால்தான், 3 வருடத்துக்கு முன்பு, கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணத்தை அதிகபட்சம் ரூ5 ஆக நிர்ணயிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டங்கள்கூட ஆங்காங்கே நடந்தது.

 விருப்பம்

விருப்பம்

பல முக்கிய சேனல்கள், தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், கேபிள், டிவி கட்டணம் உயர்த்தப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்களுக்கு மாறும் முறையானது, 2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைப்படி வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம்... ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12ஆக குறைக்கப்பட்டது.

 சேனல்கள்

சேனல்கள்

இதனால் வாடிக்கையாளர்கள் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை கண்டுகளிக்க முடியும். இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு சேனல் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், டிஸ்னி ஹாட் ஸ்டாரில், தொகுப்பு சேனல்களின் கட்டணம் 40 லிருந்து 69 ஆக உயர்கிறது. இதுபோல், ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளார்களாம்.. இதில், சில சேனல்கள் முக்கிய சேனல்களின் தொகுப்பில் இருந்து மாற்ற உள்ளனர்...

 கவலை

கவலை

இதனால் மாத கேபிள் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது அரசு கேபிள் கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றுமுதல் கேபிள் டிவி கட்டணம் உயர்கிறது.. ஏற்கனவே பெட்ரோல் டீசல், கியாஸ் சிலிண்டர் விலையில் சிக்கி தவித்து வரும்போது, கேபிள் டிவி கட்டணமும் உயர்ந்துள்ளது நடுத்தர மக்கள் மத்தியில் கவலையை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+