மனைப்பிரிவு அனுமதிக்கான மேல்முறையீட்டுக்கு புதிய ஆப்.. தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைப்பிரிவு அனுமதிக்கான மேல்முறையீடுகளை தாக்கல் செய்ய புதிய செயலியை செயல்பாட்டுக்கு கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் வெளிப்படையான மற்றும் எளிமையான முறையில் செயலாக்கப்படுவதையும், கண்காணிக்கப்படுவதையும், தீர்க்கப்படுவதையும் உறுதிசெய்ய இச்செயலி ஒற்றைச்சாளர இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில்; "தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ், உரிய அதிகார அமைப்புகள் வழங்கும் ஆணைகள் மற்றும் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழி வகை இருந்தாலும், அத்தகைய மேல்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் முறைகளையே பின்பற்ற வேண்டியது உள்ளது. மேல்முறையீடுகளை தாக்கல் செய்யவும், கண்காணிக்கவும், தீர்வு காணவும் ஒருங்கிணைந்த இணையதள வசதியோ அல்லது மேல்முறையீட்டு முடிவுகள் தொடர்பான விவரங்களை பொதுவெளியில், வெளியிடுவதற்கான வசதி இல்லை. இதற்கு தீர்வாக, ஒற்றைச்சாளர இணையதள வாயிலாக கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு ஒப்புதலுக்கான புதிய இணையதள மேல்முறையீட்டு விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

plot land

மாநிலம் முழுவதும் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் வெளிப்படையான மற்றும் எளிமையான முறையில் செயலாக்கப்படுவதையும், கண்காணிக்கப்படுவதையும், தீர்க்கப்படுவதையும் உறுதிசெய்ய இச்செயலி ஒற்றைச்சாளர இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த இணையதள மேல்முறையீட்டு முறைமையானது, மின்னணு முறையில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தல், அசல் விண்ணப்பத்துடன் தானியங்கி இணைப்பு, நிகழ்நேரக் கண்காணிப்பு, மின்னணு தொடர்பு, தணிக்கை பதிவேடுகளை பராமரித்தல், மேல்முறையீட்டு ஆணைகளை வழங்குதல் மற்றும் வெளியீடுதல் ஆகியவற்றின் மூலம் முழுமையான இணையவழி செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். இது, கடந்த 27-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தின் பத்திரம் மற்றும் உரிமை ஆவணங்கள், பட்டா மற்றும் தொடர்புடைய வருவாய்த் துறை ஆவணங்கள், நில அளவை மற்றும் எல்லைகள் குறித்த விவரங்கள், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர் அல்லது திட்ட வல்லுநர் தயாரித்த மனைப்பிரிவு வரைபடம், தேவைக்கேற்ப பிற துறைகளின் தடையின்மைச் சான்றுகள் (NOC) போன்றவற்றுடன் மனைப்பிரிவு அனுமதிக்கு மற்றும் உங்கள் மனு குறித்து மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே உள்ள நிலத்தைப் பல மனைகளாகப் பிரிக்கவா? புதிய சாலைகள் அமைத்து மனைப்பிரிவை உருவாக்கவா? ஏற்கெனவே அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுக்கு அனுமதி பெறவா? என்பதை பொறுத்து அனுமதிகள் மாறுபடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் என்றால் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்கள் உள்ளாட்சி துறையில் விண்ணப்பிக்க வேண்டும். இப்போது அரசு அறிமுகம் செய்துள்ள ஆப் மூலம் எளிதாக மனைப்பிரிவு அனுமதிக்கான மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+