பிளம் கேக் முதல் ரம் கேக் வரை! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வந்த புதுவரவுகள்! குவியும் ஆர்டர்கள்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த ஆண்டும் புது வகையான கேக் வகைகள் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
ஏசு கிறிஸ்து பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் என்றாலே புத்தாடை, இனிப்பு, கேக் உள்ளிட்டவைகள் பிரதான இடம் பிடிக்கும்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. வீடு தோறும் கிறிஸ்துமஸ் குழுவினர் பண்டிகையை வரவேற்கும் விதமாக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பண்டிகையின் போது வீடுகளில் ஸ்டார் விளக்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அது போல் தேவாலயங்ளிலும் வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீடு தோறும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விவரிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 24 ஆம் தேதி இரவு தேவலாயங்களுக்கு கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்வர்.
அது போல் கிறிஸ்துமஸ் அன்றும் திருப்பலி நடத்தப்படும். அன்று கிறிஸ்துவர்கள் தேவாலயத்துக்கு சென்று அங்கு பிரார்த்தனை முடித்துக் கொண்டு அங்கிருப்போருக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர். பிறகு அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கேக், இனிப்பு, பலகாரங்கள், உணவு வகைகளை கொடுத்து மகிழ்வர்.
சிலர் கேக்குகளை வீடுகளிலேயே தயாரிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். பலர் கேக்குகளை பேக்கரிகளில் ஆர்டர் கொடுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு புதுவகையான கேக்குகள் வருகை தந்துள்ளன. அதில் honey almond cake, checker board cake, rose lychee cake உள்ளிட்டவை வந்துள்ளன.
அது போல் பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கேக்குளும், தண்டை, மெடிரா (Madeira), பாதாம் கொட்டைகளால் தயாரிக்கப்பட்ட கேக்குளும் கிடைக்கின்றன. இந்த கேக்குள் நீங்கள் வாங்கும் கிலோவுக்கு ஏற்ப கேட்கும் டிசைன்களில் வருகிறது. அதாவது கிறிஸ்துமஸ் ட்ரீ வடிவத்திலும் கேக்குகள் உள்ளன.
சாண்டா கிளாஸ் உருவம் பதித்த கேக்குகள் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன. இது போதாமல் ஆல்கஹால் குறைந்த ரம் கேக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. ரசமலாய் கேக், பட்டர் ஸ்காட் கேக், கிறிஸ்துமஸ் ஸ்டார் வடிவ பிளம் கேக், இதய வடிவத்திலான பிளம் கேக்குளும் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ஆரம்ப விலையே ரூ 800 முதல் ஆயிரக்கணக்கில் செல்கின்றன.
அதாவது கேக்கின் எடை, டிசைன், அதில் சேர்க்கப்படும் எக்ஸ்ட்ரா பொருட்களான நட்ஸ், பழங்கள், ஜெம்ஸ், சாக்கோ சிப்ஸ், செர்ரி, சாக்லேட் சாஸ் இவையெல்லாம் தனி கட்டணம் ஆகும். கேக்கை எடுங்க, கொண்டாடுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications