சென்னை விமான நிலையத்திற்கு புதிய முதன்மை சுங்கத்துறை ஆணையர் நியமனம்..பின்னணியில் ‘குருவி’ விவகாரமா?
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு புதிதாக முதன்மை சுங்கத்துறை ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஒரு விமானத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் 'குருவி'களாக வந்த நிலையில் சுங்க அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றப்பட்டனர்.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 14ஆம் தேதி சென்னை வந்தது. இந்த விமானத்தில் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர்.

விமானத்தில் வந்த 186 பேரையும் நிறுத்தி தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பயணிகள் மட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய 113 பேரிடமும் நள்ளிரவு வரை விசாரணை நடந்தது. உள்ளாடைக்குள் தங்கப் பசைகளை மறைத்தும், சூட்கேஸ் லைனிங்கில் தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பியாக மாற்றியும் கடத்தி வந்தது தெரியவந்தது.
113 'குருவி'களிடம் மொத்தம் ரூ.14 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள் உட்பட 204 செல்போன்கள், லேப்டாப், சிகரெட் பண்டல், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ ஆகியவை கைப்பற்றப்பட்டன. 113 பேர் மீதும் சுங்க சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஒரே விமானத்தில் 113 பேர் கடத்தல் குருவிகளாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் பணியில் இருந்த சிலர் இதற்கு உடந்தையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, அப்போது விமான நிலையத்தில் பணியில் இருந்த சுங்கத் துறை கண்காணிப்பாளர்கள் 4 பேர், ஆய்வாளர்கள் 16 பேர் என மொத்தம் 20 பேரை கூண்டோடு சென்னையில் உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்து விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள நிதி அமைச்சகம், சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை புதிய முதன்மை ஆணையராக ராமாவத் சீனிவாச நாயக் என்பவரை நியமித்துள்ளது. இவர் ஏற்கெனவே சுங்கத் துறை தலைமையகத்தில், தணிக்கை பிரிவில், முதன்மை ஆணையராக பணியில் இருந்தவர்.
சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான நிலைய சரக்ககப் பிரிவு ஆகிய இரண்டுக்கும் சுங்கத் துறை முதன்மை ஆணையராக பணியிலிருந்த மேத்யூஸ் ஜோலி, இனி சென்னை விமான நிலைய சரக்கக பிரிவுக்கு மட்டும் முதன்மை ஆணையராகச் செயல்பட உள்ளார். இது வழக்கமான மாற்றம் தான் என்றும், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாகத் தான் ஆணையர்கள் இருந்தனர் என்றும் சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications