தமிழ்நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரி யார்? லிஸ்ட்டில் 3 பேர்! யாருக்கு வாய்ப்பு?
சென்னை: புதிதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்களை கொண்ட பரிந்துரை பட்டியலை தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சத்யபிரதா சாஹு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னதாக, ராஜேஷ் லக்கானி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சத்யபிரதா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பாக விலங்குகள் நலம், கால்நடை பராமரித்துறை மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், சத்யபிரதா சாஹு விரைவில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் இந்தப் பொறுப்பில் தொடர்வார்.
தமிழ்நாட்டுக்கான புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியை நியமிக்கும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மைச் செயலர் மற்றும் அதற்கு கூடுதல் நிலையில் உள்ள, தேர்தல் அதிகாரியாக விருப்பமான அதிகாரிகள் 3 பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசிடம் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் பெற்றுள்ளது.
தர்மேந்திர பிரதாப் யாதவ், மங்கத் ராம் சர்மா மற்றும் மற்றொரு மூத்த அதிகாரி என 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயா்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ் தற்போது, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (டான்சிட்கோ) தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மங்கத் ராம் சர்மா ஐ.ஏ.எஸ். தற்போது பொதுப்பணித்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களில் ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரியாக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியல் அடிப்படையில், திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வரும் அக்டோபர் 29 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications