மசாஜ் சென்டர்கள் ‘கதவை பூட்டவே கூடாது’ - வில்லங்கமான புகார்களால் புதிய விதிகள்.. மாநகராட்சி அதிரடி!
சென்னை : சென்னையில் பல இடங்களில் முறையான அனுமதி பெறாமல் விதிகளை மீறி ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட்டு வருவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த புகார்களின் பேரில் சென்னை போலீசார் அடிக்கடி சோதனை செய்து விதிகளை மீறிச் செயல்படும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஸ்பா, அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்களுக்கான லைசென்ஸ் பெறுவதற்கு புதிய விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

மசாஜ் சென்டர்கள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் விதிகளை மீறி ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட்டு வருவதாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. சில இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அவ்வப்போது சோதனை செய்து இதுபோன்ற மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் நடத்த லைசென்ஸ் பெறுவதற்கு புதிய விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

புதிய நிபந்தனைகள்
ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான தொழில் உரிமம் பெற, 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற்கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி சார்பில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொழில் உரிமம் பெறுவதற்கு, ஒற்றைச் சாளர முறையில் சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினர் அனுமதி அளிப்பார்கள் என அந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதவுகள் பூட்டி இருக்கக் கூடாது
முக்கியமாக, கதவுகளை பூட்டிய நிலையில், மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. அவை இயங்கும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்க கூடாது. வாடிக்கையாளர்களுக்கு தனி வருகை பதிவேடு இருக்க வேண்டும் என மாநகராட்சி கொண்டு வந்துள்ள புதிய விதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் சேவைகள் கூடாது
மேலும், எந்த வகையிலும், பாலியல் தொடர்பான சேவைகள் வழங்கக் கூடாது. காவல் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார் அடிப்படையில் சோதனை செய்வார்கள். பாலியல் சேவைகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உட்புறம் மற்றும் நுழைவுப் பகுதிகளில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது என விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சுகாதாரம் அவசியம்
ஒருவருக்கு சேவை வழங்கிய பின், பணியாளர், தன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதன் பின் தான் அடுத்தவருக்கு சேவை வழங்க வேண்டும். அதேபோல், ஒருவருக்கு சேவை வழங்கிய பின், அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன், கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர், அதற்கான படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுதப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications