வங்கக்கடலில் புதிய புயல்? நாளை இரவுக்குள் கரைக்கு திரும்புங்கள்.. மீனவர்களுக்கு பறந்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப மீன்வளத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் அடுத்தடுத்து புயல்கள் வங்கக்கடலில் உருவாகின. இதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மீன்வளத் துறை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 12.11.2026 இரவுக்குள் கரை திரும்ப வேண்டும்.

New Cyclone Threat in Bay of Bengal Fishermen Warned to Return to Shore by Tomorrow Night

வங்கக்கடலில் 13.11.2026 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீன்பிடிப் படகுகள் அனைத்தும் 12.11.2026 இரவுக்குள் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அப்படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பி, பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 13.11.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் (Fishing Tokens) வழங்கப்படாது. குமரி எல்லைக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் 12.11.2026-க்குள் கரைக்குத் திரும்பி, தங்களது வழக்கமான மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

New Cyclone Threat in Bay of Bengal Fishermen Warned to Return to Shore by Tomorrow Night

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் வெளியிடப்படும் அறிவுரைகளை மீனவர்கள் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு என்ன?

நவம்பர் 12-ஆம் தேதியான நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வருகிற 15-ஆம் தேதி இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வந்து நிற்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர் மேலும் வலுப்பெற்று தமிழகக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்தை நோக்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வருகிற 15-ஆம் தேதியில் இருந்து மழைக்கான சூழல் அதிகரித்துள்ளது. 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நல்ல மழை இருக்கும். புயலாக மாறும் பட்சத்தில் அது தமிழகப் பகுதிகளில் 19-ஆம் தேதியோ, அதற்கடுத்த நாட்களிலோ கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது. அண்மையில் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் குறுகிய காலத்தில் உருவானதால், முதல் புயல் கரையைக் கடந்ததும் கடலுக்குச் சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் இரண்டாவது புயலில் சிக்கிக்கொண்டனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+