டாஸ்மாக்கில் 10 ரூபாய் பஞ்சாயத்து இனி வராது.. தமிழக அரசு வைக்கப் போகும் செக்! குடிமகன்கள் ஹேப்பி
சென்னை: தமிழக டாஸ்மாக் மதுக்கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் 50 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்ததால், கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்தது. அப்படியும் கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், புதிய நடைமுறையை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான விற்பனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 4,700 மதுபான கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் மது விற்பனை செய்யப்படும் போது எம்.ஆர்.பி விலையை விட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் 50 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

குவாட்டருக்கு ரூ.10 ம், ஃபுல் என்றால் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.50 ம் கேட்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் மீது குடிமகன்கள் தொடர்ந்து புகார்களை முன்வைக்கிறார்கள். இந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும், இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை.
புதிய நடைமுறை அமல்
கூடுதல் பணம் கேட்டதால் டஸ்மாக் ஊழியர்களுக்கும், மது பிரியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெறும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைத்தலங்களில் வைரல் ஆகி வருகின்றன. எனவே இத்தகைய பிரச்சினைகள் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது, தற்போது டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின்கள் உள்ளன.
இதில் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் அளவுக்கு டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை என்றாலும் கூட கூடுதலாக பணம் வாங்கப்படுவதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். எனவேதான் புதிய நடைமுறையை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.
ஸ்வைப்பிங் மெஷின் வழங்க முடிவு
சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்ளில், வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அதில் உள்ள தொகை ஸ்வைப்பிங் மெஷினில் தோன்றி அதை அப்படியே கிளிக் செய்து பேமண்ட் செலுத்தினால் போதும். எவ்வளவு தொகை என்பதை நாம் பதிவிட வேண்டியது இல்லை. மெஷினில் காட்டும் தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.
இதேபோல டாஸ்மாக் கடைகளிலும் இனி மது பாட்டில்களை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலில் நிர்ணயிக்கபட்ட விலை மட்டும்தான் வரும் அளவுக்கு மாற்றப்பட உள்ளது. இந்த தொகையை கார்டு மூலமாகவோ யுபிஐ வழியாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகை செலுத்த முடியாது. இந்த புதிய முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஸ்வைப்பிங் மெஷின் வழங்கிய வங்கி நிர்வாகங்களுடன் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
ரொக்கமாக வாங்கினால்..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 10 நாட்களுக்குள் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. புதிய முறை அமலுக்கு வரும் பட்சத்தில் கூடுதலாக மது பாட்டிலுக்கு வாங்குவதாக சொல்லப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும், ரொக்கமாக பணம் கொடுத்து மது பாட்டில்களை வாங்கும் போது இந்த பிரச்சினை நீடிக்கவே செய்யும் எனவும் இதனை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் வலியுறுத்துகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications